புதன், 22 மே, 2024

வாசியோகம் மூலம் உடல் மற்றும் மனதை செம்மையாக்கும் சித்தர் ரகசியங்கள் - சந்திர யோகம்

வாசியோகம் மூலம் உடல் மற்றும் மனதை செம்மையாக்கும் சித்தர் ரகசியங்கள்

சந்திர யோகம்

சந்திர யோகம்
சந்திர யோகம்

முருகா போற்றி, முருகா போற்றி, முருகா போற்றி

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

இன்று சந்திர யோகம் மற்றும் அதை எப்படி செய்வது பற்றியும் பாப்போம்.

சூரியயோகம் பற்றிச் சித்தர்கள் சொன்ன அரிய தகவல்களைப் படித்துவிட்டு சந்திரயோகம் படிக்கவும் நன்றி.

சந்திர யோகம் எப்போது செய்வது?

அமாவாசையிலிருந்து ஒன்பதாவது நாள் நவமியிலிருந்து பெளர்ணமி வரைக்கும் அதாவது "ஒன்பதாவது நாளிலிருந்து பதினைந்தாவது நாள்"  வரைக்கும் அந்தச் சந்திரனை  பார்க்கலாம். சந்திரனை எந்த நேரத்திலும் பார்க்கலாம் அதற்க்கு நேரம் காலம் கிடையாது.

சந்திர யோகம் எப்படி செய்வது?

சந்திர யோகம் செய்யும்போது சந்திரனை உங்களது நெஞ்சிற்கு நேராக இருப்பதிலிருந்து உங்களது கண்களுக்கு நேராக இருப்பது வரைக்கும் பார்ப்பது நல்லது, சந்திரன் அதற்கு மேலே (தலைக்கு மேலே)  சென்றால் மிகவும் அண்ணாந்து பார்ப்பது சிரமமாக இருக்கும். ஏனெனில் அண்ணாந்து பார்க்கும்போது இடது நாசி சுவாசம் எடுப்பது சிரமமாக இருக்கும்.

சந்திர யோகம்
சந்திர யோகம்

சந்திரன் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொரு நிலைகளில் மேலே வரும் அதற்கு ஏற்றார் போல் சந்திரனை பாருங்கள். அண்ணாந்து பார்க்க வேண்டாம். உங்களது கண்களுக்கு நேராக அல்லது அதற்குச் சற்று மேலே வருகிறவரைக்கும் பார்ப்பது நல்லது,

உங்களது வலது கையில் உள்ள பெரு(கட்டை) விரலால் வலது நாசியை அடைத்து, அல்லது இடது கை மோதிரவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியால் சுவாசம் செய்யுங்கள் உங்களால் எவ்வளவு நேரம் சந்திரனை கணிமைக்காமல் பார்க்கமுடியுமோ பாருங்கள். ஐந்திலிருந்து ஏழு நிமிடம் பார்த்தல் போதும். அப்படி பார்த்துவிட்டுக் கண்களை மூடி உள்ளே பார்த்தல் நிச்சயமாக ஒளியை பார்ப்பீர்கள்.

இந்த அனுபவம் மிக மகிழ்ச்சியாக இருக்கும் செய்து பாருங்கள்.

சந்திர யோகம் எவ்வளவு நாள்கள் செய்வது?

இந்தச் சந்திரயோகம் எத்தனை நாள் செய்வது என்றால் மொத்தம் 60 நாள்கள் செய்ய வேண்டும். அதாவது சந்திரயோகம் நவமியிலிருந்து பெளர்ணமி வரை 6 நாள்கள் எனப் பத்துமாதங்கள் செய்ய வேண்டும்

சூரியயோகம்  அறுபது நாள்கள் செய்திட வேண்டும். இதற்குப் பிறகும் நீங்கள் செய்து கொண்டே இருந்தால் உங்களது சக்திகள் கூடிகொண்டே இருக்குமே தவிர வீணாய் போகாது.

சந்திர யோகம்
சந்திர யோகம்

சந்திரயோகம் மற்றும் சூரியயோகம் அறுபது நாள்கள் செய்வது என்பது வாசியோகத்திற்குக்குச் சித்தியாவதர்க்கு போதுமானதாக இருக்கும்.சந்திரயோகம், சூரியயோகம் செய்யும்போது மந்திரகள் சொல்வது அவரவர் பிரியத்தின் படி செய்து கொள்ளலாம்.

கேளப்பா பூரணச் சந்திரனை நோக்கி
கெட்டியாய் நவமி முதல் தொட்டுப்பாரு
ஆளப்பா இடகலையில் சுழினைநோக்கி
அண்ரண்ட தீயேல்லாம் அகன்று போகும்
மாலைப்பா தீபத்திற்ச் சுழினைநோக்கி
மருவியங்கே பார்க்கையிலே ஒளிதான் வீசும்
நாளப்பா அறுபதுதான் இப்படியே பாரு

அடிப்படை வாசியோகத்தில் மனதை மூலதாரத்தில் பார்ப்பது தான் சரியானது ஆனால் இந்தப்பாடலில் சந்திரயோகத்தில் சுழுமுனையில் மனதை வைக்கும் நிலைபற்றிச் சொல்லியிருக்கிறார்கள் சித்தர்கள், இதை எப்படி புரிந்து கொள்வது என்றால் மனதை அந்த இடத்தில் வைப்பது என்பது முக்காரம், நங்கூரமிடுதல், அந்த இடத்தில் நிறுத்துவது,

மனதால் பார்ப்பது என்பது வேறு, மனதை நிறுத்துவது என்பது வேறு. உதாரணத்திற்க்கு ஒருவர் சாலையில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார் இது பார்ப்பது, அதே பெண்ணை மனதில்நிறுத்தி அதோடு தொடர்பு கொள்கிறார் என்றால் அதுவேறு அது சகோதர பாசமா அல்லது நட்பு பாசமா அல்லது காதல் பாசமா இதெல்லாம் அதில் அடங்கும் ஆக மனதில் நிறுத்துவது வேறு பார்ப்பது வேறு. 

நிறைய அன்பர்கள் செய்யும் தவறு இதுதான் இந்த வித்தியாசம் பற்றித் தெரிவதில்லை.

நீங்கள் சந்திர யோகத்தில் சந்திரனை பார்க்கிறீர்கள் லது நாசியை அடைத்து இடது நாசியில் சுவாசத்தை ஓடச் செய்கிறீர்கள் இதனால் சந்திரநாடி உருவாகும் அதிலே தான் நீங்கள் சந்திரனை கண்கொட்டாமல் பார்க்கிறீர்கள்,

அதே மாதிரி சுழினை நோக்கி என்றால் நீங்க அந்தச் சுழுமுனை உள்ளே மனதை நிறுத்துவது என்ற அர்த்தம் அல்ல அந்த இடத்தைக் கண்களை மூடிக்கொண்டு அங்கே நீங்கள் பார்க்கிறீர்கள் அங்கே உங்களுக்கு ஒளி தோன்றும். இதைவிடுத்து சந்திர யோகத்தில் சுழுமுனையில் மனதை வைத்துச் செய்வது நல்லதல்ல இது பைத்தியம் ஆவதற்கு வழிவகை செய்யும்

இதைக் காகப்சுண்டர் மிகத்தெளிவாகக் கூறுகிறார்

"நிநிநூக்கு பார்த்து பார்த்து கேட்டோர்கள் பல கோடி"

சந்திர யோகம்
சந்திர யோகம்

எடுத்தவுடனே சுழுமுனையில் போய் நீங்கள் கவனத்தை செலுத்த கூடாது, அப்படி செலுத்தினால் அது உங்களை உணர்வற்ற நிலைக்குக் கொண்டு போகும் இது எங்கள் குருவாகிய சித்தர் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களுடைய அனுபவம் ஆகக் கூறியிருக்கிறார். 

அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்றால் சர்க்கரை சாப்பிட்டால் இனிக்காது, வேப்பிலை சாப்பிட்டால் கசக்காது உணர்வற்ற நிலைக்குப் போய்விடும்.

இங்கே நாம் படிப்பது அடிப்படை வாசியோகம் உலக நன்மைக்காக அதனால்  உங்களது குறிக்கோளை முதலில் எதுவென்று முடிவெடுங்கள்.

நீங்கள் முழுக்க முழுக்க யோக நிலைக்கு வந்து நீங்கள் சித்தர் ஆக வேண்டுமா அது வேற பாதை இதிலேயே உயர்ந்த பாதை.

நீங்கள் இந்த உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றால் தான் நீங்கள் இந்தச் சித்தர் பாதைக்கே வர முடியும்.

ஆக இந்த உலக வாழ்க்கையில் வெற்றி பெற்று முக்தியடைய வேண்டும். முக்தியில் நான்கு வகை உண்டு அதில் சாலோக முக்தி பெற்று அதாவது நீங்கள் முதலில் கடவுளுடைய சன்னிதானத்துக்கு முதலில் வர வேண்டும். அதற்கு அறவழியில் பொருளீட்டி அன்பான இல்லறம் நடத்தி, இந்த அன்பான இல்லறத்தில் நீங்கள் வெற்றி பெற்று அதற்குப் பிறகுதான் நீங்கள் மேல வர முடியும்.

சந்திர யோகம்
சந்திர யோகம்

ஆக எடுத்தவுடனே  சுழுமுனையில் நீங்கள் கவனத்தை வைத்தால் உங்களுக்கு உணர்வு அற்று போய்விடும் உணர்வு அற்று போனதென்றால் உங்களுக்கு இல்லறமும் போச்சு துறவறமும் போச்சு. 

இந்த உணர்வோடு இருக்கக்கூடிய "உலமான சாக்கிரத்தில் ஏறலாமே"

சாக்கிரம் என்றால் உங்களுடைய சுயநினைவோடு நீங்கள் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் உணர்வற்ற நிலைக்குச் செல்லுதல் கூடாது அப்படி சென்றால் இல்லறம் அற்றுப்போகும் அதனால் மிகவும் கவனமாகப் பழகுங்கள் சித்தர்கள் நீங்கள் உணர்வற்ற நிலைக்குப் போகக் கூடாது என்கிறார்கள். 

சித்தர் பாடலில் ஒரு வரியை மட்டும் பார்த்து விட்டுப் புரிந்து கொள்ளுதல் தவறை போய் முடியும் அந்த வரிக்கு முன்னும் பின்னும் பார்த்துப் பொருள் கொள்ளுதல் அவசியம். சித்தர்கள் பாடல் வரிகள்மூலம் நம்மை எளித திசை திருப்பிவிடுவார்கள் நாம் இதற்குச் சரியான நபரா என்று,

இதற்குத் தான் நல்ல குரு அல்லது நல்ல வழிகாட்டி வேண்டும்அப்போது தான் சித்தர்களின் பாடல்களில் உள்ள மறைபொருளை உங்களுக்கு எடுத்துக்கூறுவார்கள்.

சந்திர யோகம்
சந்திர யோகம்

மீண்டும் கூறுகிறோம் "எடுத்தவுடனே சுழுமுனையில் போய் நீங்கள் கவனத்தை செலுத்த கூடாது, அப்படி செலுத்தினால் அது உங்களை உணர்வற்ற நிலைக்குக் கொண்டு போகும்." இந்த உணர்வற்றநிலைக்கு சென்றுவிட்டால் உங்களுக்கு இல்லற வாழ்க்கை கிடைக்காது. 

இந்த இல்லற வாழ்வை துறக்க வேண்டுமென்றால் நீங்கள் முதலில் அடிப்படை வாசியோகம் செய்து இல்லறத்தில் வெற்றி பெற வேண்டும் அதன் பிறகு அடுத்த நிலைக்கு வாருங்கள்.

நாம் ஏற்கனவே சூரியயோகத்தில் சொன்னது போல் தான் இதுவும்  இந்தச் சந்திரன் தேய்பிறை மற்றும் வளர்பிறை வருகையில் அந்த ஒவ்வொரு நிலைகளில் அது இருக்கும் வளர்பிறையில் ஒரு நிலையில் இருக்கும் தேய்பிறையில் ஒரு நிலையில இருக்கும் அப்போது அதன் சக்தியில் (நேர்மறை, எதிர்மறை) பாசிட்டிவ், நெகட்டிவ் இருக்கும். அதுதான் அகாரம் உகாரம், அதுதான் விந்து நாதம், அதுதான் கார சாரம் இது எல்லாம் இந்த (நேர்மறை, எதிர்மறை) பாசிட்டிவ், நெகட்டிவின் அடிப்படை தான்.

இந்தச் சந்திரனிலிருந்து இரண்டுசக்தியுமே வெளியில் வரும் அதாவது பாசிட்டிவ் வரும் நெகட்டிவ் வரும் தனித் தனியாக வரும். அந்தப் பாசிட்டிவ் நெகட்டிவ் சேர்ந்து வந்தால் பிரச்சனை இல்லை இது சூரியனில் வரும்,  சந்திரனில் அந்தப் பாசிட்டிவ் தனியாகவும் நெகட்டிவ் தனியாக வரும்.

அதனால்தான் ரொம்ப நேரம் சந்திரனில் இருக்காதே உனக்குப் பைத்தியம் பிடிக்கும் என்பார்கள்.

சந்திர யோகம்
சந்திர யோகம்

இது லூனாடிக் என்ற ஒரு ரிசர்ச் செய்திருக்கிறார்கள். நமக்குத்தேவையான நேர்மறை சக்தி நவமியிளிருந்து பௌர்ணமி வரைக்கும் சந்திரனில் நிறைய கிடைக்கிறது, அந்த நாள்களில் சந்திரன் தெரியவில்லை என்றாலும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். அதனால் சந்திரனிலிருந்து வரும் நேர்மறை சக்திகளை நாமும் கிரகித்துக்கொள்ளலாம் இதனால் மனம் ஒருநிலைப்படும். 

தேய்பிறையில் சந்திரன் நன்றாகத் தெரிந்தாலும் தயவுசெய்து இந்தப்பயிற்சியை செய்ய வேண்டாம் அப்போது சந்திரனில் இரண்டு குணம் உண்டு என்பதால் அந்த நேரத்தில் எதிர்மறை சக்திகள் வெளிவரும் அது நமக்கு நல்லதல்ல 

எங்கள் குருவாகிய சித்தர் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஐயா அவரது  27ம் வயதிலேயே இதில் சித்தியடைந்து அவருடைய உடலையும் உயிரையும் இணைக்கும் ஆன்மா என்ற இறைவனை அவரால் பார்த்தாகக் கூறினார். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த இந்த யோகத்தை சித்தர் பெருமக்கள் நமக்கு வழங்கியுள்ளர்கள்.

தன்னை தான் அறிந்து கொள்வான்,

தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,

தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!

வெள்ளி, 17 மே, 2024

வாசியோகம் மூலம் உடல் மற்றும் மனதை செம்மையாக்கும் சித்தர் ரகசியங்கள் - சூரிய யோகம்

வாசியோகம் மூலம் உடல் மற்றும் மனதை செம்மையாக்கும் சித்தர் ரகசியங்கள்

சூரிய யோகம்

பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர்

வாசியோகம் செய்வதற்கான வழிமுறைகளில் சில வழிமுறைகளை அதாவது ஆரம்பகட்ட வழிமுறைகளை காண்போம், அதில் குறிப்பாக வாசியோகம் செய்வதற்கு முதலில் உடலையும் மனதையும் இணைக்க வேண்டும், இந்த உடலையும் மனதையும் இணைக்கக்கூடிய அந்த தொழில்நுட்பம் என்ன என்பதை இந்த பாடங்களிலும்  இனிவரும் பாடங்களிலும் பார்க்கலாம்.

இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் பார்க்கலாம்.

சித்தர் முறையில் வாத, பித்த, கபம் நீக்கும் பயிற்சிகள்

வாசியோகம் செய்தல் உடல் அழியாமல் பாதுகாக்கும் என சொல்கிறோம் அப்படியானால் உடல் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் உடலை அழிக்கக் கூடியது எது? என்பதை தெரிந்தது கொள்ளவேண்டும், 

உடலை அழிக்கக்கூடியதை சித்தர்கள் மிக அருமையா முத்தோஷம் என சொல்லி உள்ளார்கள்.

இந்த முதோசம் என்றால் "வாத, பித்த, கபம்",

இந்த வாதம் என்பது வந்து இடுப்பில் இருக்கிற நீர்.

இந்த பித்தம் என்பது சென்னியில் இருக்கிற நீர், 

இந்த கபம் (சிலேத்துமம்) என்பது எங்கு இருக்கிறதென பார்த்தால் கபாலத்தில் இருக்கும் சுழிமுனையில் இருந்து கீழே மூலாதாரம் வரைக்கும் இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் இந்த கபம் என்ற சளி படலம் இருக்கிறது, இந்த சளிப்படலாம் தன் சிலேத்துமம்.

ஆக இந்த மூன்று தோஷம் வரக்கூடாது, மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இந்த "வாத, பித்த, கபம்" சமநிலையில் இருந்தால் நமது உடல் அழியாமல் இருக்கும்.

ஆனால் இந்த சமநிலை தவறியது என்று சொன்னால் மனித  உடலை  அழிக்கக்கூடிய காரணியாக இருக்கும்.

இந்த முத்தோஷத்தையும் போக்கக்கூடிய வழிமுறைகளை நம் சித்தர்கள் மிக எளிமையாக சொல்லியுள்ளார்கள்.

இந்த முத்தோஷத்தைப் போக்குவதற்கு மூன்று கல்பங்களை சித்தர்கள்  சொல்லியுள்ளார்கள். 

கல்பம் என்றல் என்ன?

சூரிய யோகம்
சூரிய யோகம்

கல்பம் என்றல் "PREVENTIVE, CURATIVE, REGENERATIVE" இது என்னவென்றால்

  • "PREVENTIVE"       : நோயை உருவாகாமல் தடுப்பது
  • "CURATIVE"             : நோயை குணப்படுத்துவது
  • "REGENERATIVE" : உடலை புத்துயுர் செய்தல்

இந்த மூன்றும் சேர்ந்து செய்வதுதான் கல்பங்கள்.

இந்த கல்பங்களில் முக்கியமான மூன்று கல்பங்கள்  இந்த முத்தோஷத்தை போக்க கூடியதாக இருக்கிறது.

அந்த கல்பங்கள் எதுவென்றால் கரிசாலை, கத்தாழை, கடுக்காய் இந்த மூன்று "க"வும் மிக முக்கியமான "க",  இந்த முத்தோஷத்தை போக்கக்கூடிய முறைக்கு பெயர் வழலை வாங்கல்,

வழலை என்றால் என்ன?

இந்த மூன்று தோஷங்களும் நமது உடலில் வழவழ கொழகொழவென்று ஒரு வகையான சளி படலங்களை உற்பத்தி செய்யும் இதுதான் விஷம். இந்த விஷம் உடம்பில் ஏற ஏற ஏற ஏற மனிதன் வயதாகியும் நோய் வாய்ப்பட்டும் இறக்கிறான். உடலில் இருக்கக்கூடிய இந்த விஷயங்களை நாம் வெளியேற்றி விட்டால் நம் உடல் உறுதியாக ஆரோக்கியமாக இருக்கும்.

ஆக இந்த வழலையை வெளியேற்றுவதற்கான அந்த வழிமுறைகள் தான் வழலை வாங்கல், இந்த வழலை வாங்கல் மூலமாக நாம் இந்த உடளில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தப்படுத்தலாம்.

(நாம் வழலை வாங்கல் பற்றி விரிவாக அடுத்து வரும் பாடங்களில் பார்க்கலாம்).

நாம் உடல் சுத்தப்படுத்தும் முறையை பற்றிப் பார்த்தோம், இனி  மனதை பற்றிப் பார்ப்போம்.

மனம் என்றால் என்ன? 

மனம் என்பது என்னவென்றால் இது ஒரு DATA BASE ஐம்புலன்களினால் வரக்கூடிய செய்திகள் அதாவது கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் இந்த ஐந்து செயல்கள் தான் மனம், கண்டு கேட்டு நமக்காகப் பார்ப்பது, கேட்பது, சுவைத்து உணர்வது, வாசனைகளை நுகர்வது, நமது உடல் உணர்ந்து அறியக்கூடியது, நல்ல ஒரு குளுமையான காற்று நம்மீது படும்போது சந்தோசமாக உணர்கிறோம், ஆக இது எல்லாமே உணர்தல், இந்த ஐந்து உணர்வுகளில் கிடைக்கக்கூடிய இந்த அனுபவங்களைத் தொகுத்து வைப்பது தான் மனம்.

ஆக மனம் என்பது உணர்வு சார்ந்தது, இந்த மனதை நாம் அழித்து விட முடியாது, மனம் அழிந்தால் உடல் அழியும். இந்த மனம் இல்லை என்றால் எதுவுமே இல்லை, இந்த மனதை வைத்துதான் நாம் எதையும் செய்ய முடியும். ஆக இந்த மனதை  நெறிப்படுத்திக் குவிக்க வேண்டும்,

சூரிய யோகம்
சூரிய யோகம்

சித்தர்கள் சொன்ன மனதை  நெறிப்படுத்திக் குவிக்கும் தொழில்நுட்பங்கள் தான் நாம் பார்க்கப்போகிறோம், நம் மனதை பற்றி அகத்தியர் மிக எளிமையாகக் கூறியிருக்கிறார்.

“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்

மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே”

இந்த பாடலை மேலோட்டமாக பார்த்தல் மனதை செம்மைபடுத்திவிட்டால் மந்திரப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, வாசிப்பயிற்சி இவைகள் எல்லாம் தேவையே இல்லையே எனத்தோன்றும் அனால் பொருள் அது அல்ல. மனதை செம்மை படுத்து, செம்மை படுத்து என்று எளிதாக சொல்லிவிட்டும் போகலாம். 

மனம் செம்மை என்றால் என்ன? 

(ஆக மனம் செம்மைப்படுத்தினால் எதுவுமே வேண்டாம் என்பது உண்மை,)

மனம் எப்போது செம்மையாகும்?

மேலே உள்ள பாடலுக்கு அடுத்து பல பாடலுக்கு பிறகு சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் மனம் எப்போது செம்மையாகும் அதுக்கு அடுத்த பாடல்களுக்கு பிறகு என்ன சொல்கிறார் என்றால் சுழுமுனை திறந்தால் மனம் சுழியில் அகப்பட்ட துரும்பு போல் ஒடுங்கும்

இந்த மனம் எப்பொது ஒடுங்கும்?

இதற்கு சுழுமுனை திறக்கவேண்டும் அப்போது மனம் ஒடுங்கும்

சுழுமுனை திறக்கவேண்டுமென்றால்?

வாசியோகம் செய்யவேண்டும். 

ஆக மனதை செம்மைபடுத்தும் முறை, மனதை ஒருநிலைப்படுத்தும் முறை, மனதை குவிக்கக்கூடிய முறையை நமது சித்தர்கள் நிறைய பயிற்சிகள் செய்து அந்த அனுபவத்திற்குப்பிறகு நமக்கு சொல்லியுள்ளார்கள். 

திராடகா பயிற்சியை நமது வள்ளலார் செய்திருக்கிறார்கள், விவேகானந்தர் செய்திருக்கிறார்கள், சிருங்கேரி  சுவாமிகள் செய்திருக்கிறார்கள், யோகி ராம்சுரத்குமார் அவர்கள்  செய்திருக்கிறார்கள், சங்கராச்சாரியார் சுவாமிகள் செய்திருக்கிறார்கள் இது மாதிரி நிறைய ஞானிகள் யோகிகள் எல்லோரும்  இந்த திராடகம் பயிற்சியை  செய்திருக்கிறார்கள்.

இந்த திராடகா பயிற்சி என்பது மிக எளிமையான பயிற்சி இதில் மனம் நன்கு குவியும்.

சித்தர் ரகசியங்கள்
சித்தர் ரகசியங்கள்

இது செய்வது எப்படி?

நீங்கள் மிக அமைதியாக வீட்டில் ஓர் இடத்தில் உட்கார்ந்து சுவற்றில் ஒரு புள்ளியை வரைந்து வைத்து அதை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பது ஒரு பயிற்சி.

அடுத்த பயிற்சி உங்களுக்கு பிடித்த கடவுள் அல்லது சித்தர் படத்தை வைத்து அதில் அவர்கள் கண்களை மட்டும் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பது இது மிக முக்கியம்.

இதற்க்கடுத்தப்பயிற்சி ஒரு விளக்கு அல்லது ஒரு மிகச்சிறிய LOWEST VOLTAGE BULB அதை எரிய விட்டு அதை தொடர்ந்து பாருங்கள்.

இதை எவ்வளவு நேரம் பார்க்கலாம்? அப்படியென்ற ஒரு கேள்வி வரும் அதற்க்கு 5-ல் இருந்து 7 நிமிடம் வரைக்கும் பார்க்கலாம். ஆரம்பத்தில்  கண்களிருத்து நீர் வடியும் பிறகு வடியாது. அதற்கு பிறகு அந்த ஒளியே உங்கள் கண்களை மூடினால் உங்களுக்குள் தெரியும். 

சித்தர் இராஜாகிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களிடம், சில சித்தர்களிடம் எப்படி பேசுவது என்று கேட்கையில் அவர் கூறிய வழிமுறை என்னவென்றால் ஒரு விளக்கை ஏற்றி வைத்து அல்லது ஒரு சித்தர் படத்தை வைத்து அதன் முன்  அமர்ந்து திராடகம் செய்தால் அதாவது இமைக்காமல் திராடகம் செய்துவிட்டு, உங்களுக்கு தேவையானது என்ன கேள்வியோ அதை கேட்டுவிட்டு அதன் பிறகு தூங்கி காலையில் எழும்போது உங்களுக்கு விடை கிடைக்கும் என்றார். அதாவது சித்தர்கள் வந்து சொல்லுவார்கள் இது ஒரு முறை: இது திராடகா.

இந்த திராடகம் தான் நமது கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் ஓம் என எழுதி வைத்திருப்பார்கள் அங்கு இருட்டு அறை போல் இருக்கும், அந்த இடத்தில் அமர்ந்து ஓம் என்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் இதனால் தியானம் நன்கு கைகூடும் இதுவும் திராடகம் தான்.

சித்தர்களின்: சூரிய யோகம் மற்றும் திராடகா

இந்த திராடகம் செய்தப்பிறகு நாம் சூரியயோகம் செய்யவேண்டும். இது மிகவும் சக்தி வாய்ந்த யோகம், இந்த சூரியயோகத்தை நாம் செய்யும் போது நமக்கு அளப்பரிய சக்திகள் கிடைக்கும். 

ஸ்ரீ ராமர்
ஸ்ரீ ராமர்

இந்த சூரியயோகத்தை ஸ்ரீ ராமன் செய்திருக்கிறார், ஸ்ரீ ராமன் சூரியயோகம் செய்து ராவணனை வீழ்த்தியதாக ஆதித்ய ஹிருதயம் பாடி ராவணனை வீழ்த்தியதாக ஒரு செய்திகளும் உண்டு.

ஆதித்ய ஹிருதயம் என்பது வெற்றி தரக்கூடியது, நீங்கள் எதில் வெற்றி பெறவேண்டுமோ அதற்கு முன் இந்த சூரியயோகத்தை செய்துவிட்டு அந்த காரியத்தை செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

இந்த சூரியயோகத்திற்கு அளப்பரிய சக்தி உண்டு இதை விஞ்ஞான ரீதியாக பார்த்தோம் என்றால் நமக்கு சூரிய ஒளியிலிருந்து நமது உடல் விட்டமின் "டி"யை உற்பத்தி செய்கிறது, உற்பத்தி செய்யும் இந்த விட்டமின் "டி" என்ன செய்கிறதென்றால் நாம் சாப்பிடுகிற எல்லா உணவுகளிலும்ம் இருக்கக்கூடிய கால்சியத்தை கொண்டு எலும்புகளில்  சேர்க்கிறது இதனால்  எலும்பு மஜ்ஜை பலப்படுத்துகிறது. 

எலும்பு மஜ்ஜை தான் நம் உடல் மிகுந்த சக்தி பெறுவதற்கும் நமது    உடல் அழியாமல் நிலைத்து இருப்பதற்கும் முக்கிய காரணங்களாகும்.

சூரிய யோகம்
சூரிய யோகம்

ஆக இந்த சூரிய யோகம் எப்படி செய்வதென்று இப்பொழுது பார்ப்போம், சூரிய யோகம் செய்வதற்கு நீங்கள் காலையில் 6 லிருந்து 8 மணியில் இருக்கக்கூடிய இளம் சூரியனை பார்ப்பது மிக நல்லது.

இந்த இளம் சூரியனை பார்ப்பது குறிப்பாக பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் பார்ப்பது  சிறப்பு, இதை எப்படி பார்ப்பது என்றால், நீங்கள் ஏற்கனவே திராடக செய்து ஓரளவுக்கு வெற்றி பெற்று இருப்பீர்கள்,  இப்போது இதை நீங்கள் பார்க்கையில வலது கை மோதிர விரலை வைத்து இடது புற நாசியை அடைத்து வலதுபுறம் நாசியில் சுவாசியுங்கள், இப்படி வலது புற நாசியில் சுவாசித்தால் இது சூரியகலை சுவாசம்.

இந்த சூரியகலை சுவாசம் பிங்கலை சுவாசம் என்ற பெயரும் உண்டு, இந்த சூரியகலை சுவாசம் செய்கையில் சூரியகலை நாடி உருவாகும், இந்த சூரியகலை நாடி சூரியனுடைய சக்தியை உங்கள் உடம்பிற்கு கொண்டு போய் சேர்க்கும், இதுதான் சூரிய யோகதினுடைய அடிப்படையான விஞ்ஞான உண்மை.

அதை எப்படி செய்யவேண்டும் முதலில் நீங்கள் சூரியகலையில் சூரிய நாடி உருவாக்கி இருக்கிறீர்கள் இப்போது சூரியனை கணிமைக்காமல் பாருங்கள், சூரியனை மேகம் மறைத்திருத்தலும் பரவாயில்லை முதலில் சிறிது நேரம் தான் பார்க்கமுடியும் அதனால் கவலை வேண்டாம் பழக பழக நன்கு பார்க்கமுடியும், கொஞ்சம் கொஞ்சமா நேரம் கூட்டிக்கொண்டே பழகுங்கள் கண்களில் நீர் வழியும் பிறகு நீர்வழிதல் நின்று விடும். இதன்பிறகு நீங்கள் சூரியனை வட்டமாகவே பார்க்கலாம் சந்திரனை பார்ப்பது போல் வட்டமாகவே பார்க்கலாம்.

நீங்கள் அப்படி பார்த்துவிட்டு கண்ணை மூடி உங்களுக்கு உள்ளே மனக்கண்ணால் பார்த்தால் ஒளி தெரியும். ஆக இந்த உள்ளொளியை உங்களால் காணமுடியும். 

ஆக இந்த சூரிய யோகத்தை நீங்கள் முதலில் ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் பாருங்கள் பிறகு அதிகபட்சமாக ஒரு ஆறு அல்லது ஏழு நிமிடம் வரைக்கும் நீங்கள் பயிற்சி செய்யலாம். இந்த ஏழு நிமிடம் செய்தாலே போதும். 

சூரிய யோகம்
சூரிய யோகம்

நீங்கள் இந்த சூரிய யோகம் செய்து முடித்தப் பிறகு நல்ல ஒரு கோரைப் பாயோ அல்லது ஒரு போர்வையை விரித்து, அதற்கு  மேல் உட்கார்ந்து உங்களால் எவ்வளவு மூச்சு இழுக்க முடியுமோ இழுத்து, மூச்சு எவ்வளவு நிறுத்த முடியுமோ நிறுத்துங்கள், எவ்வளவு மூச்சு வெளியிட முடியுமோ  வெளியிடுங்கள். இதை ஏழு நாள்களுக்கு செய்யுங்கள் இதுதான் ஆரம்பம் இந்த சூரிய யோகத்தின் உடைய ஆரம்பம்.

அடுத்த பாடங்களில் சந்திரயோகம் பற்றி பாப்போம் நன்றி

தன்னை தான் அறிந்து கொள்வான்,

தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,

தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!

வியாழன், 9 மே, 2024

சித்தர்களின் கற்பனை வடிவங்கள்

 சித்தர்களின் கற்பனை வடிவங்கள்



புலிப்பாணி சித்தர்
புலிப்பாணி சித்தர்



புலிப்பாணி சித்தர்
புலிப்பாணி சித்தர்



பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர்



பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர்



பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர்

புதன், 8 மே, 2024

வாசி யோகம் என்றால் என்ன தெரியுமா?

வாசி யோகம் என்றால் என்ன?

வாசியோகம்
வாசியோகம்


வாசி யோகம் என்றால் என்ன?

இது மிகவும்  அடிப்படையான கேள்வி இதில் இரண்டு வார்த்தைகள் உள்ளன, ஒன்று  வாசி இன்னொன்று யோகம்.

யோகம் என்பது இணைத்தல் என்ற பொருள் படும், இணைத்தல் என்றால் உயிர் பொருட்களை இணைத்தல், ஜடப் பொருள்களை இணைப்பது அல்ல.

ஜடப் பொருள்களை இணைப்பது என்பது பௌதிக மாற்றம், வேதியல் மாற்றம் ஆகியவை.  பௌதிக மாற்றம், வேதியல் மாற்றம் இதெல்லாம் ஜடப்பொருள் இணைப்பு.

வாசியோகம்
வாசியோகம்

"அப்படியானால் உயிர் பொருள் இணைப்பு என்பது? அதன் பெயர் தான் யோகம்".

யோகம் என்பது உயிர் பொருள் இணைப்பு, அப்படியானால் எந்த இணைப்பாக இருந்தாலும் அதன் பெயர் யோகம் தானா? நிச்சயமாக யோகம் தான். 

உதாரணமா ஒரு ஆணும் பெண்ணும் இணைகிறார்கள் என்றால்  அது பரியங்க யோகம், கட்டில்  யோகம், சை யோகம் இதற்க்கு மூன்று பெயர்கள்  உண்டு. 

இன்னும் ஒரு படி அதிகமா கூறினால் கர்ப்பதானம் இது யோகத்தை விட மேலான ஒரு காரியம் அந்த யோகத்தால் வரக்கூடிய விளைவுகளால் வரக்கூடியது  கர்ப்பதானம்.

ஆக இந்த யோகம் என்பது இணையதல். 

வாசியோகம்
வாசியோகம்

அப்படியானால் வாசி என்றால் என்ன? 

வாசி என்றால் காலக் கணக்கோடு நெறிப்படுத்திய சுவாசம், 

நாம் தான் சுவாசம் செய்து கொண்டு தானே இருக்கிறோம், 

அதென்ன கலக்கணக்கோடு நெறிப்படுத்திய சுவாசம்?

நமக்கு இயற்கையாக அமைக்கப்பட்ட சுவாசம் நம்மை மரணத்திற்கு இழுத்துசெல்லக் கூடியது. இந்தச் சுவாசத்தை நெறிப்படுத்தினால் மரணத்திலிருந்தே தப்பிக்கலாம்.

ஆக இந்தச் சுவாசம் என்பது மனிதன் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய  உயிர் சக்தியை இழந்து செல்களில் இருக்கும் உயிர் சக்தியை இழந்து மரணத்தை நோக்கிப் பயணம் செய்யக்கூடிய தானே நடைபெறும் சுவாசம்.

இந்தத் தானே நடைபெறும் சுவாசத்தை நெறிப்படுத்தி அதைக் காலக் கணக்கோடு நெறிப்படுத்த வேண்டும். 

வாசியோகம்
வாசியோகம்

தானே இயங்கும் மூச்சு காற்றுக்கு சுவாசம் என்று பெயர், சுவாசத்தை நெறிப்படுத்தினால் அதன் பெயர் பிரணாயாமம், அந்தச் சுவாசத்தை காலக்கணக்கோடு நெறிப்படுத்தினால் அதன் பெயர் அதுதான் வாசி

அந்தக் காலக்கணக்கோடு நெறிப்படுத்திய வாசி என்பது உள்ளிழுக்கும் மூச்சு 32 வினாடியும், உள்ளிழுத்த மூச்சை நிறுத்தி வைப்பது  64 வினாடியும், உள்ளே நிறுத்திய மூச்சை வெளியுடுவது 16 வினாடியுமகா இருந்தால் அதன் பெயர் வாசி.

"நீங்கள் ஒரு சுவாசத்தை இப்படி உருவாக்கினால் அதுதான் வாசி உருவாக்குவது".

ஆக வாசியை உருவாக்கி அதைப் பல நிலைகளோடு ஒன்று சேர்த்தல், இணைத்தல். வாசியை உருவாக்கி அதைப் பல நிலைகளோடு இணைத்தல் வாசியோகம்.

ஆக வாசி என்பது காலக்கணக்கோடு நெறிப்படுத்திய சுவாசம். அடிப்படை வாசி என்பது காலக்கணக்கோடு நெறிப்படுத்தி உருவாக்குவது. இது வாசியோகம் செய்ததாக அர்த்தம் அல்ல, வாசியை மட்டும் உருவாக்கியிருக்கிறீர்கள். 

வாசியோகம்
வாசியோகம்

இந்த வாசியை  உருவாக்கியபின் வாசியை ஒவ்வொரு சக்கரங்களிலும் ஒவ்வொரு நிலைகளுடன் அதை இணைக்கும்போது வெவ்வேறு விதமான பலன்களைக் கொடுக்கும்.

அப்படி ஒவ்வொரு பலன்களையும் பெற்று அனுபவிப்பதுதான் அஷ்டமாசித்துகள், 64 சித்துக்கள் இந்தச் சித்துகள் எல்லாம் தானாக நமக்குக் கிடைக்கும் நாமாக அதைத் தேட வேண்டியதில்லை. 

ஆக இறுதியில் நாம் எங்குச் சென்று இணைகிறோம்? 

கடைசியாக நம்முள் இருக்கும் வாசியை உருவாக்கி அந்தவாசியை கொண்டு நம்முள் இருக்கும் இறைவனை ஒளி வடிவில் காண்பது. 

வாசியை உருவாக்கி இறைவனை ஒளிவடிவில் காண்பதற்கு முன், நம்முள் இருக்கும் வாசியே மூலாதாரத்தில் வைத்து மூலாதாரத்தில் மனதை அங்கே வைத்து வாசி உருவாக்கி அங்கே தாரகலையை (குண்டலினி என்பது நம்முள் இயங்கி கொண்டிருக்கும் ஒரு சக்தி அதாவது உயிர் சக்தி, அது மூலாதரத்தில் இருக்கிறது இந்தச் சக்தி அதுவாக இயங்கிக் கொண்டுள்ளது. அதையும் நாம் வாசிக்காற்றைக் கொண்டு குண்டலினியை நெறிப்படுத்தும்போது தான் தாரகலையே உருவாகும், அந்தத் தாரகலை உருவாகி அதில் பயணிக்கூடிய உயிர் சக்திதான் குண்டலினி, இந்தக் குண்டலனி தான் வாலையாக மாறுகிறது, குண்டலினி என்பது நெருப்பும், காற்றும் சேர்ந்த ஒரு அலைவரிசை)  உருவாக்கி அங்கே சுழிமுனை நாடியை உருவாக்கி அதன் மூலம் நாம் நம்முள் இருக்கும் இறைவனை ஒளிவடிவில் தரிசிக்கிறோம்.

வாசியோகம்
வாசியோகம்

நம்முள் இருக்கும் அந்த இறைவனை நீங்கள் ஒளிவடிவில் காண்பதே வாலை. இந்த வாலையை (வாசியை வைத்துக் குண்டலினியை எழுப்பி  வாலையாக மாறியபிறகு) கொண்டு நாம் நமது சுழிமுனையில் (சுழிமுனை: அடுத்து வரும் படங்களில் காண்போம்) அமிர்தம் சுரக்கச்செய்து அந்த அமிர்தத்தை உண்டு நீண்ட ஆயளுடன், இளமையுடன் வாழ்வதுதான் இந்த அடிப்படை வாசியோகத்தின் குறிக்கோள்.

ஆக வாலை தெய்வத்துக்கு மனோன்மணி தாயென இது போன்ற நிறைய பெயர் உண்டு.  அருட்பெருஞ்ஜோதி என்ற பெயரும்  உண்டு அருட்பெருஞ்ஜோதி என்பது வேறு எதுவும் இல்லை நமக்குள் இருக்கும் இறைவன் தான். 

ஆகத் தன்னுள் இருக்கும் இறைவனை இறைவனோடு இணைதல் அடிப்படை வாசி யோகம்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? 

வாசியை மூலதாரத்தில் நிறுத்தி அங்கே  நெருப்பையும், காற்றையும் ஒன்றாகச் சேர்த்து அங்கே நாம் ஒரு அலைவரிசையை உருவாக்குகிறோம்.

நாம் உருவாக்கும் காற்றும், வெப்பமும் சேர்ந்த அலை தான் குண்டலனி(உயிர் சக்தி), இந்தக் குண்டலினி தாரகலையாக உருவாகி சுழுமுனையில் பயணிக்கும். 

இப்படி பயணிக்கையில் மேலும் நாம் அதை அழுத்தும்போது, அதாவது இந்தக் குண்டலியை அழுத்த வேண்டும் அப்பொழுதுதான் அது வாலையாக மாறும், அப்படி வாலையாக மாறயில் தான் அது ஒளிரும். 

வாசியோகம்
வாசியோகம்

இதில் காற்றும், வெப்பமுமாக இருக்கும் இதை அனேகம்பேர் உணர்த்திருப்பர்கள். காற்றும், வெப்பமும் தான் குண்டலினியை உருவாக்கக்கூடியது. இந்தக் குண்டலினி என்பது வாசியோகம் அல்ல, 

குண்டலனி என்பது வாலைக்கு முற்பட்டது, வாசியை உருவாக்கியபின் அந்தத் தானே இயங்கக்கூடிய குண்டலினியை நாம் நமது கட்டுபாட்டுக்கு கொண்டுவந்து நாம் இயக்குகிறோம். அப்படி அதை இயக்கையில் அது வாலையாக உருவாகும். 

அனைவருக்கும் இந்தக் குண்டலினி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இது வேலை செய்யவில்லை என்றால் நாம் உயிருடன் இருக்க முடியாது. அதே போல் சக்கரங்கள் வேலை செய்யவில்லை என்றாலும் நாம் உயிருடன் இருக்க முடியாது. 

இந்தச் சக்கரங்களும், குண்டலினியும் வேலை செய்துகொண்டுதான் உள்ளது. ஆனால் அது தனிச்சையாக நாம்மை தினம் தினம் அழிவிற்க்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

அதை அழிவிற்க்கு எடுத்துச் செல்லாமல் தடுத்து அதை நெறிப்படுத்தி நமது கட்டுபாட்டுக்கு கொண்டு வரச்செய்வது தான் இந்த வாசி. 

வாசியைக் கொண்டு குண்டலினியை உருவாக்கி, குண்டலினியிலிருந்து வாலையை உருவாக்கி அதை நமக்குள்ளே பார்த்து, அந்த வாலையிலருந்து அமிர்தம் உருவாக்கி அதை உண்டு இளமையோடும், மிகுந்த அறிவோடும், நீண்ட ஆயளோடும், இன்பமான இல்லற உறவோடு வாழக்கூடிய ஒரு யோகம் தான் வாசியோகம்,

வாசியோகம்
வாசியோகம்

வாசியோகம் என்றால் என்ன என்பது உங்களுக்கு மிகதெளிவாகக் குறிப்பாக அடிப்படை வாசியோகம் பற்றிப் புரிந்திருக்கும் என நம்புகிறோம். 

இந்த அடிப்படை வாசியோகம் என்பது இந்த உலக வாழ்க்கையில் நீங்கள் அணைத்து வெற்றியைப் பெறுவதற்காகவும், சக்திசளியாக விளங்குவதற்காகவும், புத்திசாலியாக விளங்குவதற்காகவும், உயர்ந்த நிலையை அடைவதற்ககவுமான ஒரு பாதை.

இதில் நிறைய சித்திகள் கிடைக்கத்தான் செய்யும் அவற்றை எல்லாம் உதாசினம் செய்ய வேண்டும். இறையருள் பெறுக!

தன்னை தான் அறிந்து கொள்வான்,

தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,

தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!


ஞாயிறு, 5 மே, 2024

சிவலிங்கம் பற்றி சித்தர்கள் கூறும் உண்மையான அர்த்தம் என்ன? What is the real meaning of the Siddhas about Shiva Lingam?

சிவலிங்கம் பற்றி சித்தர்கள் கூறும் உண்மையான அர்த்தம் என்ன?

சிவலிங்கம்
சிவலிங்கம்

வணக்கம், உங்கள் அனைவரையும்  அன்போடு, ஆத்ம பரிவோடும் வரவேற்கிறோம். 

குறிப்பு: 

        இந்தப் பதிவு புரிந்துகொள்வதற்குச் சற்று சிரமமாக இருக்கும் அதனால் சற்று ஆழ்ந்து படிக்கவும் நன்றி.

கடவுளுக்கு ஏதேதோ வடிவங்கள் கொடுத்திருக்கிறார்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள், பிறை வடிவம் உண்டு, சிலுவை வடிவம் உண்டு, சுவஸ்டி வடிவம் உண்டு. சிவனுக்கு மட்டும் ஏன் லிங்கமும் ஆவுடையுமான ஒரு வடிவம் கொடுத்திருக்கிறார்கள், அதைதான் நம் எல்லோரும் வணங்குகிறோம். 

லிங்கத்திற்கு மனித உருவமோ அல்லது வேறு எந்த உருவமோ இல்லையே, சிவனுக்கு இப்படியொரு வடிவம் கொடுத்ததற்குச் சித்தர்கள் எதாவது சூட்சமம் கூறியிருக்கிறார்களா? 

இது ஒரு நல்ல அருமையான கேள்வி இது பெரிய ஆராய்ச்சிக்குரிய ஒரு கேள்வி, இந்தக் கேள்விக்கு ஒவ்வொருவரும் நிறைய விதமான வியாக்கியானங்கள் கூறியிருக்கிறார்கள். 

சிவலிங்கம்
சிவலிங்கம்

இதற்கு எல்லாரும் பொதுவாகச் சொல்லும் ஒரு வியாக்கியானம் என்னவென்றால் "ஆண்குறி பெண்குறி" என்பதனுடைய நிலைப்பாடு தான் இது என்று எல்லாரும் பொதுவாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த லிங்கத்திற்கும் ஆவுடைக்கும் நமது பாட்டனார்களான சித்தர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் எனப் பார்த்தால்  சித்தர்களே மிக அருமையான வியாக்கியானம் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த உலகத்தில் முதல் முதலில் இருந்தது சிவம்(ஆதி) தான் இதை அவர் சிவன் எனக் கூறுகிறார். 

திருமூலர் அவரது பாடலில் இதுபற்றிக் கூறியுள்ளார்கள்  திருமந்திரத்தில் 106வது பாடலும் அதன் சித்தர்கள் கூறிய உண்மையான விளக்கத்தைக் காண்போம்.

சிவலிங்கம்
சிவலிங்கம்

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

                                                      திருமந்திரம் பாடல் எண்: 106. 

பாடலின் விளக்கம்:

            இந்த நான்கே வரியில் அந்தக் கடவுளையும் சொல்லிவிட்டார், அதற்கான உருவம் எப்படி இருக்கும் என்பதையும் கூறிவிட்டார் திருமூலர். இந்தப் பாடலைச் சாதாரணமாகப் பார்த்தால் நமக்கு ஏதும் புரியாது, அனைத்தும் மறைபொருளாக உள்ளது. 

"சிவம் (ஆதி) தான் முதல்" அந்த முதல் என்பது எப்படி ஆனது என்றால் "மூவர்(மூவரோடு)" அகாரம், உகாரம், மகாரம் இவைகள் மூன்று. 

"மூவரோடு ஐவர்" மூவரோடு சேர்ந்து ஐவர் யார் என்றால் அகாரம், உகாரம், மகாரம், நாத, விந்து ஆக இதைத்தான் ஐவர் என்கிறார் திருமூலர். 

இந்தப் பிரபஞ்சம் எப்படி உற்பத்தியானது என்றால் சிவம்(ஆதி) கடவுள் தன்னைத்தானே  படைத்துக்கொள்ளும்போது "அகார, உகார, மகார இவை மூன்று இதோடு சேர்ந்து நாத, விந்து" இவைகள் மொத்தம் ஐந்து அதாவது ஐவர் நாம் சொல்லும் "ந ம சி வ ய" என்பதும் இதைத்தான். 

சிவலிங்கம்
சிவலிங்கம்

அகாரம், உகாரம், மகாரம், நாத, விந்து பன்னிரெண்டானது, நமக்குள் இருக்கும் ஆறு ஆதாரமாகவும் பிறகு நிராதாரமாக ஆறும் மொத்தம் 12 ஆனது, இது ஒன்றோடொன்று சேர்ந்து பிணைந்திருக்கிறது தனித்தனியாக இல்லை. 

ஒன்றாக இருந்த கடவுள் "சிவன் முதல்" அகார, மகார, உகார + நாத, விந்து "மூவரோடு ஐவர்" லிருந்து 12 ஆன இந்தப் பிரபஞ்சத்தில் "அவைமுதல்" எல்லாவற்றுக்கும், இவை எல்லாவற்றையும் சேர்ந்து "விந்துவும் நாதமும் ஓங்கச்" "விந்துவும் நாதமும்" ஓங்கி நிற்கிறது. 

அப்பொழுது விந்துவும் நாதத்தையும் "சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே" அகார, உகார, மகார, நாத, விந்து இவைகளை நாம் கண்களில் காண முடியாது, ஆனால் இதைச் சபைக்கு முன் எப்படி காண்பிப்பது? அதை விந்துவும் நாதமுமாய் தான் காண்பிக்க முடியும். 

சிவலிங்கம்
சிவலிங்கம்

விந்து நாதம் ஆண்குறி, பெண்குறி மட்டும் அல்ல, விந்து, நாதம் என்பது நேர்மறை சக்தி துகள்கள், எதிர்மறை சக்தி துகள்கள் 

ஆக இந்த விந்துவும் நாதமுமாகத்தான் Negative & Positive இந்தப் பிரபஞ்சமே இயங்கி கொண்டிருக்கிறது, இந்த Negative & Positive இல்லையென்றால் இந்த உலகத்தில் இயக்கமே இருக்காது. இன்னும் சொல்லுவதென்றால்  "ஒடுக்கமும்  வேண்டும் விரிவும் வேண்டும்". ஆக இந்த விந்து நாதத்தின் குறியீடாகத்தான் சங்கரனை வெளியில் காண்பித்திருக்கிறார்கள்.

விந்துவும் நாதமும் என்றால் ஆண் பெண் தானே என்பதும் மறுக்க முடியாது தான், இது "சக்தி, சிவம்" சரி அப்படியானால் இந்த விந்துவை எப்படி குறியீடாக வெளிப்படுத்ததினார்கள்? 

சிவலிங்கம்
சிவலிங்கம்

விந்துவை வட்டமாகக் குறியீடாகக் காண்பிக்கிறார்கள், 

அதெப்படி விந்துவை வட்டமாகக் குறியீடாகக் காட்டுகிறார்கள்?

ஆண் குறியை முப்பரிமாணமாகப் பார்த்தால் அது "CYLINDRICAL", அதை இரண்டாம் (2D) பரிமாணமாகப் பார்த்தால் அது வட்டமாகத்தான் இருக்கும். ஆக விந்துவின் குறியீடை வட்டமாக ஆவுடையாகக் காண்பிக்கப்படுகிறது.

 நாதம் என்பது பெண்குறியுனுடைய வாய் வட்டம் அல்ல அது நீள் வட்டம் "ELLIPSE". ஆக நாதத்தை நீள் வட்டமாக லிங்கமாக குறியீ்டிட்டு காட்டியுள்ளார்கள். 

இந்த விந்துவும் நாதமுமாகத்தான் இந்தச் சங்கரன் இருக்கிறான். 

சங்கரன் எனும் சிவலிங்கத்தில் விந்து வட்டமாகக் கீழே ஆவுடையாகவும், நாதத்தை மேலே நீள் வட்டமாக லிங்கமாகவும் சித்தர்கள் குறியீடிட்டு காட்டியுள்ளீர்கள். 

விந்துவும் நாதமும் சேர்ந்தது தான் அனைத்து பிரபஞ்சமுமே. இந்தப் பிரபஞ்சமெனும் இறைவன் விந்து நாத வடிவாக இருக்கிறான்.

ஆக இந்த விந்து நாத வடிவான இறைவனை சக்தி சிவம் என்கிறார்கள் சித்தர் பெருமக்கள். 

சிவலிங்கம்
சிவலிங்கம்

சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாம் சிவஞ் சத தியுமாகஞ்
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே

                                                  திருமந்திரம் பாடல்: 1772.

பாடலின் விளக்கம்:

         "சத்தி சிவன்தன் விளையாட்டுத் தாரணி" இந்த உலகமே சக்தி சிவன் விளையாட்டுதான் அதாவது விந்து, நாத விளையாட்டு என்கிறார் திருமூலர்,  சக்தி என்பது நாதம், சிவன் என்பது விந்து

"சத்தி சிவமுமாம் சிவஞ் சத தியுமாகஞ்" இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே. . 

"சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லை" இந்த "சக்தி(நாதம்), சிவம்(விந்து)" தவிர இப்பிரபஞ்சத்தில் வேறில்லை. 

"சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே" ஆக "சிவம்=விந்து=வட்டம்=ஆவுடை" இருக்கிறதே இதுதான் வெட்டவெளியான பிரபஞ்சம், இப்பிரபஞ்சத்திற்குள் இருக்கக்கூடிய எல்லாமே "சக்தி=நாதம்=நீள்வட்டம்=லிங்கம்".

சிவலிங்கம்
சிவலிங்கம்

இந்த விந்து இல்லையென்றால் நாதமில்லை, நாதமில்லையென்றாலும் விந்துயில்லை இந்த இரண்டும் சேர்ந்தது தான் இப்பிரபஞ்சம். 

அதனால் தான்  "சிவம் (விந்து) சக்தி (நாதம்)" இதைக் குறீயீடாகக் காண்பிப்பதற்காக (இது மனிதன் கிடையாது, ஆண் பெண் குறி கிடையாது),

இந்தச் சிவலிங்கம் எனும் குறியீடு ஆண்பெண் குறியுனுடைய அமைப்புகளிலிருந்து எடுத்துக் கொண்டார்களே தவிர வேறுவிதமான கற்பனைகளுக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. 

இந்த வெட்டவெளியை ஒரு குறியீடாக வைத்தால் வட்டமாகக் குறியீடு வைத்துள்ளார்கள். ஆக அந்த  வெட்டவெளியான முதல் முதற்கடவுளான இறைவன் தான் சிவம் அந்தச் சிவத்திற்குள் இருக்கும் எல்லாமே சக்தி இதை நீள்வட்டமாக ஒரு குறியீடாக வைத்துள்ளார்கள்.

சிவலிங்கம்
சிவலிங்கம்

இதைத்தான் சங்கரன் (சிவலிங்கமாக) காட்டியுள்ளார்கள் இது கடவுள் அல்ல இது குறியீடு எனச் சித்தர் பெருமக்கள் கூறியுள்ளார்கள். 

ஆதி முதலாக இருந்த சிவம் குறியீடாக வரும்போது சங்கரனாகிறார். அந்தச் சங்கரனாக வரும் குறியீடு லிங்கமாகவும் ஆவுடையாகவும் வருகிறது. 

இந்தப் பிரபஞ்சத்தையே குறியீடாகக் காண்பித்த பெரிய அறிவியல் வித்தை இது. 

இந்த அறிவியல் வித்தை நமது சித்தர் பெருமக்களுக்குத் தான் உள்ளது. நமது சித்தர்களுக்கு ஈடு இணையாக ஒன்றுமேயில்லை. நன்றி

தன்னை தான் அறிந்து கொள்வான்,

தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,

தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!


வியாழன், 2 மே, 2024

வாசியோகம் செய்தலின் பொதுவான தவறுகள் - யோகதடைகளை தவிர்க்கும் வழிகள் - 02

வாசியோகம் செய்தலின் பொதுவான தவறுகள் - யோகதடைகளை தவிர்க்கும் வழிகள்

யோகதடைகள்
யோகதடைகள்

               வணக்கம், யோகதடைகளை பற்றிப் பதஞ்சலி முனிவர் கூறும் கருத்துக்களை பார்ப்போம். யோகம் என்பது பக்தி மார்க்கத்தை தாண்டியது அப்படி அந்த யோகத்தை பழகையில்  நமக்கு என்னென்ன இடையூறுகள் வரும்,  எந்த வகையான இடையூறு வரும், அதை எப்படி தவிர்ப்பது பற்றிப் பார்க்கலாம்.

இது எல்லா சாதகர்களுக்கும் பொருந்தும். இதைப் பற்றி வடமொழியில் பதஞ்சலி முனிவர் நடைமுறையில் வரக்கூடிய துன்பங்களை அவர் பட்டியலிட்டு கூறியிருக்கிறார். அப்படி அவர் பட்டியலிட்டதையும் அதை எப்படி வெல்வது என்பது பற்றியும் பார்ப்போம். 

நோய்கள்:

யோகதடைகள்
யோகதடைகள்

பதஞ்சலி முனிவர் அவருடைய யோகதடைகள் என்ற பட்டியலில் தலையாயதாய் இருப்பது  நோய், வியாதி அந்த நோய் அல்லது வியாதியினால் பிடிக்கப்பட்டுருக்கும்போது நமக்கு யோகம் செய்வது  சிரமமாக இருக்கும். இது நாம் எல்லாருக்கும் தெரிந்ததுதான் இதற்காகத் தான் முதலில்  வழலை வாங்கல் செய்து உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறோம்.

மற்றொன்று அவரவர் உடம்பை மருத்துவ ரீதியாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அப்படி பரிசோதித்தப்பிறகு உங்ளுடைய வியாதி எத்தகையதோ அதற்கேற்ப நீங்கள் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டியது சிறப்பு. இதுதான் யோகத்துக்கும் யோக நிலைக்குத் தடையாக இருப்பதை கலையக்கூடிய ஒரே வழி இதற்கு வேற வழிகள் கிடையாது. 

முதுமை:

யோகதடைகள்
யோகதடைகள்

யோகாத்தடைக்கு முதுமையும் காரணமாகும், 60 வயதிற்கு பிறகு யோம் செய்வது மிகவும் சிரமமாய் இருக்கும் அதுபோல 80 வயதிற்கு மேல் யோகம் கிடையாது ஏனெனில் 80 வயதிற்கு பிறகு நோயினுடைய தாக்கம் மற்றும் நோயினுடைய முதுமையினுடைய தாக்கம் மிகவும் கொடூரமாக இருக்கும் இதனால் யோகம் நிலைக்காது அல்லது யோகம் கைக் கூடாது எனக்கூறுகிறார்.

முதுமையென்றால் 80 வயது வரை யோகம் செய்தால் பலன் இருக்கும் அதற்கு மேல் அதாவது அந்த 80 வயதிற்கு மேல் யோகம் செய்தால் பலன் இருக்காது. முதுமை என்பது யோகத்தினுடைய நன்மைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு முடியாத அளவிற்கு சூழ்நிலை ஏற்படும். 

மந்தம்:

யோகதடைகள்
யோகதடைகள்

அடுத்து மந்தமாக இருப்பது மந்தம் என்பது "சரி நாளைக்கு யோகம் செய்வோம் யோகம் தான் நமக்குத் தெரியுமே" என்று விட்டுவிடுவது, இது எப்படி என்றால் நியூட்டனின் விதி தெரிந்தால் உடனே ராக்கெட் செய்து ஏவிவிடமுடியுமா? அதுபோல "அதுதான் எனக்குத் தெரியுமே" அப்படியென்று வாய் சவடால் செய்துகொண்டு விட்டுவிடுவது இது மந்த நிலை.

இந்த மந்தநிலையை எப்படி போக்குவது "அதுதான் எனக்குத் தெரியுமே" என்ற எண்ணத்தை விடுத்து யோகத்தை செய்து பாருங்க அப்படி யோகம் செய்வதிலேயே ஒரு தேக்க நிலை வந்தால் அதிலிருந்து மீழ்வது எப்படி?

இதிலிருந்து மீழ்வது எப்படி என்றால்  நமக்கு அதிலிருந்து மீழ்வதற்கான  எண்ணங்களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் அந்த எண்ணங்களை உருவாக்குவதில் நாம் ஒரு குறிக்கோள் வைத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு பிராணயாமத்தில் 32:64:16 என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற குறிக்கோள் வைத்துக்கொண்டால் அந்த மந்த நிலை போய்விடும். உங்களுக்குத் தெரிந்ததை செயல்படுத்திப்பாருங்கள் உங்களுக்கு மந்த நிலை வராது. அப்போது உங்களுக்கு உங்களிடமுள்ள குறைபாடுகள் தெரியும் எதை நீங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதும் புரியும் அப்படி நீங்கள் நிவர்த்தி செய்தல் இந்த மந்த நிலை மாறிவிடும் 

சந்தேகம்:

யோகதடைகள்
யோகதடைகள்

சந்தேகம் என்பது என்னவென்றால், ஐயா நான் இதைப் படிக்கவா இது படித்தால் தெரிந்துகொள்ள முடியுமா? அது படித்தால் தெரிந்துகொள்ள முடியுமா? நான் அதை எங்கே சென்று தெரிந்துகொள்வது? என்ற சந்தேகத்தை எழுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

இந்தச் சந்தேகத்தை எப்படி தீர்ப்பது? சந்தேகத்தை இரண்டு வகையில் நான் தீர்க்க முடியும்,  ஒன்று சரியான குரு கிடைக்க வேண்டும், இரண்டாவது  பட்டுத் திருந்த (அடி) வேண்டும்  பிராக்டிகலா பட்டு அழுந்தித் தெரிந்துகொள்ள வேண்டும் ஆனால் அது பெரிய காரியம். 

அதற்குப் பதில் பிறருடை அனுபவங்களிலிருந்து எது சரி எது தவறு என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆக இந்தச் சந்தேகம் தெளிவாவதற்கு நல்ல குருவிடமிருந்து நீங்கள் தெளிவு பெற்றுக்கொள்ளலாம் அதுதான் சிறந்தது இல்லையெனில் பட்டுத்தான் திருந்த வேண்டும்.

ஒரு பொய்யான குருவிடம் சீடனாக இருந்தோமேயென்றால் பட்டுத்தான் திருந்த முடியும் வேறு வழியே கிடையாது. இது அவரவர்களுடைய புத்தியின் தன்மையைப் பொறுத்தது. அதே போல் முடிவெடுப்பது என்பது உங்களுடைய முடிவாக இருக்க வேண்டும் அதனால் தான் "நீ நீயாயிரு" என்கிறோம். 

அவர் அப்படி சொல்றாரு இவர் இப்படி சொல்றாரு என்பதை விட "நீ நீயாயிரு" அவர் சொல்றது சரியா? இவர் சொல்றது சரியா? என முடிவு செய்யும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் அந்தக்கரணங்களில் "சித்தம்" எனக் கூறுகிறார்கள் இது தான் முடிவெடுக்கும் தன்மை கொண்டது (இதைப் பின் வரும் பதிவுகளில் பதிவேற்றம் செய்வோம்), இந்த முடிவு எடுக்கும் தன்மை நமக்கு வர வேண்டும்.

திருமூலர் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார் அன்னெறி இன்னெறி என்று போகாதே அட்டாங்கம் தான் நன்னெறி மற்ற நெறிகளெல்லாம் புண்னெறி என்று அடித்துக்கூறுகிறார். 

யோகதடைகள்
யோகதடைகள்

ஆக நல்ல ஒரு குருவிடம் அல்லது ஒரு வழிகாட்டியிடம் உங்களுடைய சந்தேகங்கள் எல்லாம் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளலாம், அதிலும் முக்கியமானது அவர்கள் சொல்லுவதற்கு, அவர்கள் ஆதாரத்துடன் கூறுதல் அவசியம்.

அதிலும் நீங்கள் ஆராய்தல் அதிக முக்கியமானதாகும்.  ஆதாரத்துடன் கூடிய தெளிவு உங்களுக்கு வேண்டும் அதுதான் மிகவும் முக்கியமாகும்,
ஆகச் சந்தேகங்களும் தயக்கங்களும் ஒரு மனிதனை யோக நிலைக்குப் போக விடாது.

தன்னை தான் அறிந்து கொள்வான்,

தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,

தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!

புதன், 1 மே, 2024

வாசியோகம் செய்தலின் பொதுவான தவறுகள் - யோகதடைகளை தவிர்க்கும் வழிகள் - 01

வாசியோகம் செய்தலின் பொதுவான தவறுகள் - யோகதடைகளை தவிர்க்கும் வழிகள்

யோகதடைகள்
யோகதடைகள்

              வாசியோகம் என்பது சக்திகளை வளர்க்கும் ஒரு பழமையான கலை. ஆனால், சில சாதகர்கள் பல வருடங்கள் பயிற்சி செய்தும் பலன்களை அடையாமல் வருந்துவதாகக் கூறுகின்றனர். 

இது பொதுவாகச் சில தவறுகள் செய்துவிடுவதால் ஏற்படுகிறது. வாசியோகம் செய்யும்போது சில முக்கியமான கட்டுப்பாடுகளை மீறுவது, அதிக அளவில் எதிர்பார்ப்பு வைப்பது, அல்லது பயிற்சியின்போது தவறான முறைகளைப் பின்பற்றுவது போன்றவை யோகதடைகளை உண்டாக்கும். 

இந்த உள்ளடக்கம் வாசியோகம் செய்வோர்கள் செய்யும் பொதுவான தவறுகளையும், அவற்றைத் தவிர்க்கும் வழிகளையும் விளக்குகிறது.

நீங்கள் முயற்சி செய்வீர்கள் பலன் கிடைக்கவில்லையே அப்படியென்று ஏங்குவீர்கள். நான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் என்ன செய்தாலும் எனக்கு உள்ளொளி தெரியவில்லையே மற்றவர்கள் ஒளி தெரிகிறது என்கிறார்கள். 

அவர்கள் அப்படி செய்கிறார்கள் அது கிடைக்கிறது இவர்கள் இப்படி செய்கிறார்கள் அதனால் இது கிடைக்கிறது என்கிறீர்கள். இப்படியெல்லாம் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது. அப்படி ஒப்பிட்டுப் பார்த்து  எனக்கு எதுவும் கிடைக்கவில்லையேயென வருந்துவது, இது எல்லோரிடமும் இருக்கும் ஒரு குறைபாடு தான்.  இது சாதாரண வாழ்வில் கூட இது நடக்கும். 

அவர்கள் நல்லாயிருக்கிறார்கள், இவர்கள் நல்லாயிருக்கிறார்கள் நான் நல்லதே செய்கிறேன் ஆனால் இப்படி இருக்கிறேன், தப்பு செய்கிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள், எனக்கு மட்டும் ஏன் இந்தக் கஷ்டம் எல்லாம் வருகிறது,   நான் மட்டும் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும், எனக்கு மட்டும் ஏன் எதுவும் நடக்க மாட்டேன்கிறது.  இப்படியெல்லாம் ஒரு நினைப்பு வருவது தவறானது, அந்த நினைப்பிற்கு நாம் செல்லக்கூடாது.  

இதுபோல் இருந்தால் யோகம் நிலைத்திருக்காது. யோகத்தில் ஒரு நிலைப்பாடும் உங்களுக்குக் கிடைக்காது, இந்தந்த நிலைகளை நாம் தாண்டி விட்டோம் என்கிற ஒரு நிலைப்பாடும் கிடைக்காது. அதாவது தக்க வைத்துக்கொள்வது யோகநிலையில்  நமக்குக் கிடைத்ததை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக அட்டாங்க யோகத்தில் 

யோகதடைகள்
யோகதடைகள்

நீங்கள் அடைந்த ஒரு நிலை திரும்பப் பின்னோக்கி போகாது. நீங்கள்  இவ்வளவு முயன்றேன், அவ்வளவு முயற்சிசெய்து பார்த்தேன் என்று  நீங்களாக நினைப்பது தவறு,  மற்றவர்கள் அட்டாங்கயோகத்தில் எந்த அளவுக்கு மனம் குவிந்து ஒருமைப்பாடுடன் அவர்கள் பயிற்சி செய்கிறார்களோ அந்த அளவிற்கு விரைவாக முன்னேறுவார்கள். 

நீங்க மனம் குவியாமல் அல்லது வேற காரியங்களிலிருந்து, யோக நிலைப்பாட்டில் இருக்கக்கூடிய குறைபாடுகளோடு நீங்கள் தவறாகப் பயிற்சியைச் செய்துவிட்டு நான் ரெண்டு வருடமாக யோகா செய்கிறேன் எனக்கு எந்த நிலையும் கிடைக்கவில்லை என்று சொன்னால் இவைகள் மேலே சொன்ன  காரணங்களால் இருக்கும். 

அதனால் உங்களுக்கு யோகம் கைகூடாமல் இருக்கும், அதை நீங்கள் எதுவென்று கண்டறிந்து அதைக் கலைந்துவிட்டு நீங்கள் ஒரு முழுமையான ஈடுபாட்டுடன் வைராக்கியத்தோடு யோகம் செய்தீர்களென்றால் விரைவில் உங்களுக்கு யோகம் கைகூடும் இதை "அலத்த பூமி கட்பம்" என்று கூறுகிறார்கள். 

அடுத்தது நிலை நிலையாமை இதுவும் முன்பு சொன்னது போல் தான் இரண்டிற்கும் ஏறக்குறைய ஒன்று போல் தான் இருக்கும், இதில் என்ன வித்யாசம் என்றால் இதை "அனவஸ்திக தத்வம்" என்று சொல்கிறார்கள். 

யோகதடைகள்
யோகதடைகள்

அனவஸ்திக தத்வம்:

அது என்ன "அனவஸ்திக தத்வம்" இதன் அர்த்தம் என்னவென்றால்  இந்த மனநிலை கொண்டவர்கள் அட்டாங்க யோகத்தில் இரண்டாண்டுகள் பயிற்சி செய்து கொண்டுருப்பார்கள், பிறகு சிறிது நாட்களில் சித்த வித்யை செய்யச் சென்றுவிடுவார்கள், அதையும் சிலநாட்கள் பயிற்சியாகச் செய்து கொண்டிருப்பார்கள்.

 திடீரென்னு "வித்யா தத்துவம்" என அடுத்த பயிற்சிக்குச் சென்றுவிடுவார்கள், அதிலும் சில நாட்களுக்குப் பிறகு பார்த்தால் அந்த முனிவரைப் பார்க்கச் சென்றேன், இந்தச் சற்குருவிடன் சென்றேன் என்று தெருத்தெருவாகச் சுற்றுவார்கள், இப்படி மாறி மாறிச் சுற்றுவதால் எந்தப் பயனும் உங்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. 

இதற்கு  ஒரு நிலையிலிருந்து சரியானதை முதலில் தேர்ந்தெடுங்கள், எது சரியெனத் தேர்ந்தெடுங்கள் நீங்கள் எதைச் சரியென்று தேர்ந்தெடுக்கிறீர்களோ அதில் நிலையாக இருங்கள், இதுதான் சரியான நிலை, 

அதைவிடுத்து ஒரு பயிற்சியைச் செய்து கொண்டிருக்கையிலேயே புத்த மதத்தில் விபாசனா என்று ஒன்று இருக்கிறதே அதை நான் பயிற்சி செய்யப்போகிறேன் என்று மாறி மாறி அங்கும் இங்கும் அழைந்து தனது வாழ்நாளையெல்லாம் கெடுத்திருப்பார்கள்.இவர்கள் நிலையற்ற தன்மை கொண்டவர்கள். இது போன்ற நிலையற்ற தன்மை கொண்டவர்கள் அதிகமாக உள்ளார்கள் நாமும் பார்த்திருப்போம். 

இவர்கள் நான் எங்கெங்கோ எல்லாம் சென்று அந்த யோகம் படித்திருக்குறேன், இங்குச் சென்று யோகம் படித்துப் பிரம்மரிஷி பட்டம் வாங்கியிருக்கிறேன் என்று கூறுவார்கள், இந்த நிலையற்ற தன்மை கொண்டவர்கள். 

யோகதடைகள்
யோகதடைகள்

முதலில் எது சரியென முடிவெடுங்கள் இது தான் மிகவும் முக்கியமானது. திருமூலர் ஏற்கனவே கூறியிருக்கிறார் அட்டாங்க யோகம் தான் சரியான வழி மற்ற வழிகளெல்லாம் நல்ல நெறிகளில்லையென உறுதியாகக் கூறியிருக்கிறார். திருமூலரே கூறியிருந்தாலும் உங்களுக்கான நிலையிலிருந்து "நீ நீயாயிருந்து" முடிவெடுங்கள் உங்களுக்கு எது சரியானதென்று. 

ஆக எதையும் தெரிந்து கொள்ளாமல் முட்டாள் தனமாக யாரோ ஒருவர் சொல்கிறார் என்று எதோ ஒரு மாயையில் எல்லோரும் அங்குச் செல்கிறார்கள், எல்லோரும் அதைச் செய்கிறார்கள், எல்லோரும் சென்று அந்தச் சித்தரைப் பார்க்கிறர்கள், அந்தச் சித்தர் யாரும் இருக்க முடியாத இடத்தில் அமர்ந்திருக்கிறாராம், அவர் சாப்பிடுவதே இல்லையாம் இப்படியெல்லாம் மாயையில் திரிந்து கொண்டிருந்தால் உங்களுக்கு எதுவுமே கிடைக்காது.

இதுதான் நிலையற்ற தன்மை இந்த நிலையற்ற தன்மை உங்களைப் பின்னோக்கி இழுத்து சென்றுவிடும். இந்த நிலை தவிர்க்கபட வேண்டியது. எதாவது ஒரு நிலையான முடிவிற்கு வருங்கள், முடிவிற்கு வந்தபிறகு அந்தப் பாதையைச் சரியாகக் கடைபிடியுங்கள் அதுதான் சிறந்தது. 

உங்களுக்கு நீங்களே பகையாளி:

அடுத்து "உங்களுக்கு நீங்களே பகையாளி" இது எதைக் குறிக்கிறது என்றால் நீங்கள் கற்ற காரியங்களைத் தவறாகப் பயன்படுத்துவது, அதைச் செயல்படுத்தி பார்ப்பதை தவறாகப் பிரயோகம் செய்வது இவைகள் யோக நிலைக்குச் செய்யும் பெரிய தவறு,  

யோகதடைகள்
யோகதடைகள்

இதற்கு  அகத்தியர் என்ன கூறியிருக்கிறாரெனப் பார்ப்போம். தவறான காரியங்கள் செய்ததினால் இடைக்காடான் அழித்தான் என்கிறார், இப்படியொரு சித்தர் பதினொன் சித்தர்களில் ஒருவர், தான் செய்த தவறான காரியங்களால் அழிந்தார் என்கிறார் அகத்தியர். பெண்ணினத்தால் போகர் குலம் அழிந்ததப்பா என்கிறார் நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் அழிந்தது போகர் அல்ல "போகர் குலம்" அழிந்தது என்கிறார்.

பழனியில் நிறைய தவறான நிகழ்வுகள் நடத்திருக்கிறது  என்று அகத்தியர் சாடுகிறார். தன்னிலை மறந்து தவறாகப் பயன்படுத்துதல் அதாவது தன்னிலை மறந்து யோக நிலையைத் தவறாகப் பயன்படுத்தினால் அது அழிவுக்குத் தான் வித்திடும். இவர்களுக்கு மேற்கொண்டு யோகம் சித்திக்காது. 

ஆரம்பநிலை சாதககரிலிருந்து, முதிர்நிலை சாதககர்கள் வரை என்னென்ன தவறுகள் நிகழும், அதை எப்படி கலைந்தெரிய வேண்டும் என்று இதுவரை பார்த்தோம். இதிலிருந்து மீண்டு வந்து முன்னேறிச் செல்ல இறைவன் அனைவருக்கும் வாசியோகத்தில் வெற்றிபெற்று "தான் அவன் ஆக" அருள்புரிவார் நன்றி.

தன்னை தான் அறிந்து கொள்வான்,

தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,

தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!

பாகம் - 02

மருந்தீடு + முறிவு பாகம்-1

மருந்தீடு புலிப்பாணி சித்தர் மந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்பது மனதின் திரம் மந்திரம்  தந்திரம் என்பது தனது திறன் தந்திரம். இந்த மனதின் ...