வாசியோகம் செய்தலின் பொதுவான தவறுகள் - யோகதடைகளை தவிர்க்கும் வழிகள்
யோகதடைகள் |
வாசியோகம் என்பது சக்திகளை வளர்க்கும் ஒரு பழமையான கலை. ஆனால், சில சாதகர்கள் பல வருடங்கள் பயிற்சி செய்தும் பலன்களை அடையாமல் வருந்துவதாகக் கூறுகின்றனர்.
இது பொதுவாகச் சில தவறுகள் செய்துவிடுவதால் ஏற்படுகிறது. வாசியோகம் செய்யும்போது சில முக்கியமான கட்டுப்பாடுகளை மீறுவது, அதிக அளவில் எதிர்பார்ப்பு வைப்பது, அல்லது பயிற்சியின்போது தவறான முறைகளைப் பின்பற்றுவது போன்றவை யோகதடைகளை உண்டாக்கும்.
இந்த உள்ளடக்கம் வாசியோகம் செய்வோர்கள் செய்யும் பொதுவான தவறுகளையும், அவற்றைத் தவிர்க்கும் வழிகளையும் விளக்குகிறது.
நீங்கள் முயற்சி செய்வீர்கள் பலன் கிடைக்கவில்லையே அப்படியென்று ஏங்குவீர்கள். நான் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் என்ன செய்தாலும் எனக்கு உள்ளொளி தெரியவில்லையே மற்றவர்கள் ஒளி தெரிகிறது என்கிறார்கள்.
அவர்கள் அப்படி செய்கிறார்கள் அது கிடைக்கிறது இவர்கள் இப்படி செய்கிறார்கள் அதனால் இது கிடைக்கிறது என்கிறீர்கள். இப்படியெல்லாம் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பது. அப்படி ஒப்பிட்டுப் பார்த்து எனக்கு எதுவும் கிடைக்கவில்லையேயென வருந்துவது, இது எல்லோரிடமும் இருக்கும் ஒரு குறைபாடு தான். இது சாதாரண வாழ்வில் கூட இது நடக்கும்.
அவர்கள் நல்லாயிருக்கிறார்கள், இவர்கள் நல்லாயிருக்கிறார்கள் நான் நல்லதே செய்கிறேன் ஆனால் இப்படி இருக்கிறேன், தப்பு செய்கிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள், எனக்கு மட்டும் ஏன் இந்தக் கஷ்டம் எல்லாம் வருகிறது, நான் மட்டும் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும், எனக்கு மட்டும் ஏன் எதுவும் நடக்க மாட்டேன்கிறது. இப்படியெல்லாம் ஒரு நினைப்பு வருவது தவறானது, அந்த நினைப்பிற்கு நாம் செல்லக்கூடாது.
இதுபோல் இருந்தால் யோகம் நிலைத்திருக்காது. யோகத்தில் ஒரு நிலைப்பாடும் உங்களுக்குக் கிடைக்காது, இந்தந்த நிலைகளை நாம் தாண்டி விட்டோம் என்கிற ஒரு நிலைப்பாடும் கிடைக்காது. அதாவது தக்க வைத்துக்கொள்வது யோகநிலையில் நமக்குக் கிடைத்ததை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக அட்டாங்க யோகத்தில்
யோகதடைகள் |
நீங்கள் அடைந்த ஒரு நிலை திரும்பப் பின்னோக்கி போகாது. நீங்கள் இவ்வளவு முயன்றேன், அவ்வளவு முயற்சிசெய்து பார்த்தேன் என்று நீங்களாக நினைப்பது தவறு, மற்றவர்கள் அட்டாங்கயோகத்தில் எந்த அளவுக்கு மனம் குவிந்து ஒருமைப்பாடுடன் அவர்கள் பயிற்சி செய்கிறார்களோ அந்த அளவிற்கு விரைவாக முன்னேறுவார்கள்.
நீங்க மனம் குவியாமல் அல்லது வேற காரியங்களிலிருந்து, யோக நிலைப்பாட்டில் இருக்கக்கூடிய குறைபாடுகளோடு நீங்கள் தவறாகப் பயிற்சியைச் செய்துவிட்டு நான் ரெண்டு வருடமாக யோகா செய்கிறேன் எனக்கு எந்த நிலையும் கிடைக்கவில்லை என்று சொன்னால் இவைகள் மேலே சொன்ன காரணங்களால் இருக்கும்.
அதனால் உங்களுக்கு யோகம் கைகூடாமல் இருக்கும், அதை நீங்கள் எதுவென்று கண்டறிந்து அதைக் கலைந்துவிட்டு நீங்கள் ஒரு முழுமையான ஈடுபாட்டுடன் வைராக்கியத்தோடு யோகம் செய்தீர்களென்றால் விரைவில் உங்களுக்கு யோகம் கைகூடும் இதை "அலத்த பூமி கட்பம்" என்று கூறுகிறார்கள்.
அடுத்தது நிலை நிலையாமை இதுவும் முன்பு சொன்னது போல் தான் இரண்டிற்கும் ஏறக்குறைய ஒன்று போல் தான் இருக்கும், இதில் என்ன வித்யாசம் என்றால் இதை "அனவஸ்திக தத்வம்" என்று சொல்கிறார்கள்.
யோகதடைகள் |
அனவஸ்திக தத்வம்:
அது என்ன "அனவஸ்திக தத்வம்" இதன் அர்த்தம் என்னவென்றால் இந்த மனநிலை கொண்டவர்கள் அட்டாங்க யோகத்தில் இரண்டாண்டுகள் பயிற்சி செய்து கொண்டுருப்பார்கள், பிறகு சிறிது நாட்களில் சித்த வித்யை செய்யச் சென்றுவிடுவார்கள், அதையும் சிலநாட்கள் பயிற்சியாகச் செய்து கொண்டிருப்பார்கள்.
திடீரென்னு "வித்யா தத்துவம்" என அடுத்த பயிற்சிக்குச் சென்றுவிடுவார்கள், அதிலும் சில நாட்களுக்குப் பிறகு பார்த்தால் அந்த முனிவரைப் பார்க்கச் சென்றேன், இந்தச் சற்குருவிடன் சென்றேன் என்று தெருத்தெருவாகச் சுற்றுவார்கள், இப்படி மாறி மாறிச் சுற்றுவதால் எந்தப் பயனும் உங்களுக்குக் கிடைக்கப்போவதில்லை.
இதற்கு ஒரு நிலையிலிருந்து சரியானதை முதலில் தேர்ந்தெடுங்கள், எது சரியெனத் தேர்ந்தெடுங்கள் நீங்கள் எதைச் சரியென்று தேர்ந்தெடுக்கிறீர்களோ அதில் நிலையாக இருங்கள், இதுதான் சரியான நிலை,
அதைவிடுத்து ஒரு பயிற்சியைச் செய்து கொண்டிருக்கையிலேயே புத்த மதத்தில் விபாசனா என்று ஒன்று இருக்கிறதே அதை நான் பயிற்சி செய்யப்போகிறேன் என்று மாறி மாறி அங்கும் இங்கும் அழைந்து தனது வாழ்நாளையெல்லாம் கெடுத்திருப்பார்கள்.இவர்கள் நிலையற்ற தன்மை கொண்டவர்கள். இது போன்ற நிலையற்ற தன்மை கொண்டவர்கள் அதிகமாக உள்ளார்கள் நாமும் பார்த்திருப்போம்.
இவர்கள் நான் எங்கெங்கோ எல்லாம் சென்று அந்த யோகம் படித்திருக்குறேன், இங்குச் சென்று யோகம் படித்துப் பிரம்மரிஷி பட்டம் வாங்கியிருக்கிறேன் என்று கூறுவார்கள், இந்த நிலையற்ற தன்மை கொண்டவர்கள்.
யோகதடைகள் |
முதலில் எது சரியென முடிவெடுங்கள் இது தான் மிகவும் முக்கியமானது. திருமூலர் ஏற்கனவே கூறியிருக்கிறார் அட்டாங்க யோகம் தான் சரியான வழி மற்ற வழிகளெல்லாம் நல்ல நெறிகளில்லையென உறுதியாகக் கூறியிருக்கிறார். திருமூலரே கூறியிருந்தாலும் உங்களுக்கான நிலையிலிருந்து "நீ நீயாயிருந்து" முடிவெடுங்கள் உங்களுக்கு எது சரியானதென்று.
ஆக எதையும் தெரிந்து கொள்ளாமல் முட்டாள் தனமாக யாரோ ஒருவர் சொல்கிறார் என்று எதோ ஒரு மாயையில் எல்லோரும் அங்குச் செல்கிறார்கள், எல்லோரும் அதைச் செய்கிறார்கள், எல்லோரும் சென்று அந்தச் சித்தரைப் பார்க்கிறர்கள், அந்தச் சித்தர் யாரும் இருக்க முடியாத இடத்தில் அமர்ந்திருக்கிறாராம், அவர் சாப்பிடுவதே இல்லையாம் இப்படியெல்லாம் மாயையில் திரிந்து கொண்டிருந்தால் உங்களுக்கு எதுவுமே கிடைக்காது.
இதுதான் நிலையற்ற தன்மை இந்த நிலையற்ற தன்மை உங்களைப் பின்னோக்கி இழுத்து சென்றுவிடும். இந்த நிலை தவிர்க்கபட வேண்டியது. எதாவது ஒரு நிலையான முடிவிற்கு வருங்கள், முடிவிற்கு வந்தபிறகு அந்தப் பாதையைச் சரியாகக் கடைபிடியுங்கள் அதுதான் சிறந்தது.
உங்களுக்கு நீங்களே பகையாளி:
அடுத்து "உங்களுக்கு நீங்களே பகையாளி" இது எதைக் குறிக்கிறது என்றால் நீங்கள் கற்ற காரியங்களைத் தவறாகப் பயன்படுத்துவது, அதைச் செயல்படுத்தி பார்ப்பதை தவறாகப் பிரயோகம் செய்வது இவைகள் யோக நிலைக்குச் செய்யும் பெரிய தவறு,
யோகதடைகள் |
இதற்கு அகத்தியர் என்ன கூறியிருக்கிறாரெனப் பார்ப்போம். தவறான காரியங்கள் செய்ததினால் இடைக்காடான் அழித்தான் என்கிறார், இப்படியொரு சித்தர் பதினொன் சித்தர்களில் ஒருவர், தான் செய்த தவறான காரியங்களால் அழிந்தார் என்கிறார் அகத்தியர். பெண்ணினத்தால் போகர் குலம் அழிந்ததப்பா என்கிறார் நாம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் அழிந்தது போகர் அல்ல "போகர் குலம்" அழிந்தது என்கிறார்.
பழனியில் நிறைய தவறான நிகழ்வுகள் நடத்திருக்கிறது என்று அகத்தியர் சாடுகிறார். தன்னிலை மறந்து தவறாகப் பயன்படுத்துதல் அதாவது தன்னிலை மறந்து யோக நிலையைத் தவறாகப் பயன்படுத்தினால் அது அழிவுக்குத் தான் வித்திடும். இவர்களுக்கு மேற்கொண்டு யோகம் சித்திக்காது.
ஆரம்பநிலை சாதககரிலிருந்து, முதிர்நிலை சாதககர்கள் வரை என்னென்ன தவறுகள் நிகழும், அதை எப்படி கலைந்தெரிய வேண்டும் என்று இதுவரை பார்த்தோம். இதிலிருந்து மீண்டு வந்து முன்னேறிச் செல்ல இறைவன் அனைவருக்கும் வாசியோகத்தில் வெற்றிபெற்று "தான் அவன் ஆக" அருள்புரிவார் நன்றி.
தன்னை தான் அறிந்து கொள்வான்,
தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,
தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக