வாசியோகம் செய்தலின் பொதுவான தவறுகள் - யோகதடைகளை தவிர்க்கும் வழிகள்
யோகதடைகள் |
வணக்கம், யோகதடைகளை பற்றிப் பதஞ்சலி முனிவர் கூறும் கருத்துக்களை பார்ப்போம். யோகம் என்பது பக்தி மார்க்கத்தை தாண்டியது அப்படி அந்த யோகத்தை பழகையில் நமக்கு என்னென்ன இடையூறுகள் வரும், எந்த வகையான இடையூறு வரும், அதை எப்படி தவிர்ப்பது பற்றிப் பார்க்கலாம்.
இது எல்லா சாதகர்களுக்கும் பொருந்தும். இதைப் பற்றி வடமொழியில் பதஞ்சலி முனிவர் நடைமுறையில் வரக்கூடிய துன்பங்களை அவர் பட்டியலிட்டு கூறியிருக்கிறார். அப்படி அவர் பட்டியலிட்டதையும் அதை எப்படி வெல்வது என்பது பற்றியும் பார்ப்போம்.
நோய்கள்:
யோகதடைகள் |
பதஞ்சலி முனிவர் அவருடைய யோகதடைகள் என்ற பட்டியலில் தலையாயதாய் இருப்பது நோய், வியாதி அந்த நோய் அல்லது வியாதியினால் பிடிக்கப்பட்டுருக்கும்போது நமக்கு யோகம் செய்வது சிரமமாக இருக்கும். இது நாம் எல்லாருக்கும் தெரிந்ததுதான் இதற்காகத் தான் முதலில் வழலை வாங்கல் செய்து உடலில் உள்ள கழிவுகளை நீக்கிச் சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்று கூறுகிறோம்.
மற்றொன்று அவரவர் உடம்பை மருத்துவ ரீதியாகப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அப்படி பரிசோதித்தப்பிறகு உங்ளுடைய வியாதி எத்தகையதோ அதற்கேற்ப நீங்கள் மருத்துவம் பார்த்துக்கொள்ள வேண்டியது சிறப்பு. இதுதான் யோகத்துக்கும் யோக நிலைக்குத் தடையாக இருப்பதை கலையக்கூடிய ஒரே வழி இதற்கு வேற வழிகள் கிடையாது.
முதுமை:
யோகதடைகள் |
யோகாத்தடைக்கு முதுமையும் காரணமாகும், 60 வயதிற்கு பிறகு யோம் செய்வது மிகவும் சிரமமாய் இருக்கும் அதுபோல 80 வயதிற்கு மேல் யோகம் கிடையாது ஏனெனில் 80 வயதிற்கு பிறகு நோயினுடைய தாக்கம் மற்றும் நோயினுடைய முதுமையினுடைய தாக்கம் மிகவும் கொடூரமாக இருக்கும் இதனால் யோகம் நிலைக்காது அல்லது யோகம் கைக் கூடாது எனக்கூறுகிறார்.
முதுமையென்றால் 80 வயது வரை யோகம் செய்தால் பலன் இருக்கும் அதற்கு மேல் அதாவது அந்த 80 வயதிற்கு மேல் யோகம் செய்தால் பலன் இருக்காது. முதுமை என்பது யோகத்தினுடைய நன்மைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு முடியாத அளவிற்கு சூழ்நிலை ஏற்படும்.
மந்தம்:
யோகதடைகள் |
அடுத்து மந்தமாக இருப்பது மந்தம் என்பது "சரி நாளைக்கு யோகம் செய்வோம் யோகம் தான் நமக்குத் தெரியுமே" என்று விட்டுவிடுவது, இது எப்படி என்றால் நியூட்டனின் விதி தெரிந்தால் உடனே ராக்கெட் செய்து ஏவிவிடமுடியுமா? அதுபோல "அதுதான் எனக்குத் தெரியுமே" அப்படியென்று வாய் சவடால் செய்துகொண்டு விட்டுவிடுவது இது மந்த நிலை.
இந்த மந்தநிலையை எப்படி போக்குவது "அதுதான் எனக்குத் தெரியுமே" என்ற எண்ணத்தை விடுத்து யோகத்தை செய்து பாருங்க அப்படி யோகம் செய்வதிலேயே ஒரு தேக்க நிலை வந்தால் அதிலிருந்து மீழ்வது எப்படி?
இதிலிருந்து மீழ்வது எப்படி என்றால் நமக்கு அதிலிருந்து மீழ்வதற்கான எண்ணங்களை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும் அந்த எண்ணங்களை உருவாக்குவதில் நாம் ஒரு குறிக்கோள் வைத்துக்கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு பிராணயாமத்தில் 32:64:16 என்ற நிலையை அடைந்தே தீர வேண்டும் என்ற குறிக்கோள் வைத்துக்கொண்டால் அந்த மந்த நிலை போய்விடும். உங்களுக்குத் தெரிந்ததை செயல்படுத்திப்பாருங்கள் உங்களுக்கு மந்த நிலை வராது. அப்போது உங்களுக்கு உங்களிடமுள்ள குறைபாடுகள் தெரியும் எதை நீங்கள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதும் புரியும் அப்படி நீங்கள் நிவர்த்தி செய்தல் இந்த மந்த நிலை மாறிவிடும்
சந்தேகம்:
யோகதடைகள் |
சந்தேகம் என்பது என்னவென்றால், ஐயா நான் இதைப் படிக்கவா இது படித்தால் தெரிந்துகொள்ள முடியுமா? அது படித்தால் தெரிந்துகொள்ள முடியுமா? நான் அதை எங்கே சென்று தெரிந்துகொள்வது? என்ற சந்தேகத்தை எழுப்பிக்கொண்டே இருப்பார்கள்.
இந்தச் சந்தேகத்தை எப்படி தீர்ப்பது? சந்தேகத்தை இரண்டு வகையில் நான் தீர்க்க முடியும், ஒன்று சரியான குரு கிடைக்க வேண்டும், இரண்டாவது பட்டுத் திருந்த (அடி) வேண்டும் பிராக்டிகலா பட்டு அழுந்தித் தெரிந்துகொள்ள வேண்டும் ஆனால் அது பெரிய காரியம்.
அதற்குப் பதில் பிறருடை அனுபவங்களிலிருந்து எது சரி எது தவறு என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆக இந்தச் சந்தேகம் தெளிவாவதற்கு நல்ல குருவிடமிருந்து நீங்கள் தெளிவு பெற்றுக்கொள்ளலாம் அதுதான் சிறந்தது இல்லையெனில் பட்டுத்தான் திருந்த வேண்டும்.
ஒரு பொய்யான குருவிடம் சீடனாக இருந்தோமேயென்றால் பட்டுத்தான் திருந்த முடியும் வேறு வழியே கிடையாது. இது அவரவர்களுடைய புத்தியின் தன்மையைப் பொறுத்தது. அதே போல் முடிவெடுப்பது என்பது உங்களுடைய முடிவாக இருக்க வேண்டும் அதனால் தான் "நீ நீயாயிரு" என்கிறோம்.
அவர் அப்படி சொல்றாரு இவர் இப்படி சொல்றாரு என்பதை விட "நீ நீயாயிரு" அவர் சொல்றது சரியா? இவர் சொல்றது சரியா? என முடிவு செய்யும் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் அந்தக்கரணங்களில் "சித்தம்" எனக் கூறுகிறார்கள் இது தான் முடிவெடுக்கும் தன்மை கொண்டது (இதைப் பின் வரும் பதிவுகளில் பதிவேற்றம் செய்வோம்), இந்த முடிவு எடுக்கும் தன்மை நமக்கு வர வேண்டும்.
திருமூலர் மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார் அன்னெறி இன்னெறி என்று போகாதே அட்டாங்கம் தான் நன்னெறி மற்ற நெறிகளெல்லாம் புண்னெறி என்று அடித்துக்கூறுகிறார்.
யோகதடைகள் |
ஆக நல்ல ஒரு குருவிடம் அல்லது ஒரு வழிகாட்டியிடம் உங்களுடைய சந்தேகங்கள் எல்லாம் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளலாம், அதிலும் முக்கியமானது அவர்கள் சொல்லுவதற்கு, அவர்கள் ஆதாரத்துடன் கூறுதல் அவசியம்.
அதிலும் நீங்கள் ஆராய்தல் அதிக முக்கியமானதாகும். ஆதாரத்துடன் கூடிய தெளிவு உங்களுக்கு வேண்டும் அதுதான் மிகவும் முக்கியமாகும்,
ஆகச் சந்தேகங்களும் தயக்கங்களும் ஒரு மனிதனை யோக நிலைக்குப் போக விடாது.
தன்னை தான் அறிந்து கொள்வான்,
தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,
தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக