புதன், 22 மே, 2024

வாசியோகம் மூலம் உடல் மற்றும் மனதை செம்மையாக்கும் சித்தர் ரகசியங்கள் - சந்திர யோகம்

வாசியோகம் மூலம் உடல் மற்றும் மனதை செம்மையாக்கும் சித்தர் ரகசியங்கள்

சந்திர யோகம்

சந்திர யோகம்
சந்திர யோகம்

முருகா போற்றி, முருகா போற்றி, முருகா போற்றி

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

இன்று சந்திர யோகம் மற்றும் அதை எப்படி செய்வது பற்றியும் பாப்போம்.

சூரியயோகம் பற்றிச் சித்தர்கள் சொன்ன அரிய தகவல்களைப் படித்துவிட்டு சந்திரயோகம் படிக்கவும் நன்றி.

சந்திர யோகம் எப்போது செய்வது?

அமாவாசையிலிருந்து ஒன்பதாவது நாள் நவமியிலிருந்து பெளர்ணமி வரைக்கும் அதாவது "ஒன்பதாவது நாளிலிருந்து பதினைந்தாவது நாள்"  வரைக்கும் அந்தச் சந்திரனை  பார்க்கலாம். சந்திரனை எந்த நேரத்திலும் பார்க்கலாம் அதற்க்கு நேரம் காலம் கிடையாது.

சந்திர யோகம் எப்படி செய்வது?

சந்திர யோகம் செய்யும்போது சந்திரனை உங்களது நெஞ்சிற்கு நேராக இருப்பதிலிருந்து உங்களது கண்களுக்கு நேராக இருப்பது வரைக்கும் பார்ப்பது நல்லது, சந்திரன் அதற்கு மேலே (தலைக்கு மேலே)  சென்றால் மிகவும் அண்ணாந்து பார்ப்பது சிரமமாக இருக்கும். ஏனெனில் அண்ணாந்து பார்க்கும்போது இடது நாசி சுவாசம் எடுப்பது சிரமமாக இருக்கும்.

சந்திர யோகம்
சந்திர யோகம்

சந்திரன் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொரு நிலைகளில் மேலே வரும் அதற்கு ஏற்றார் போல் சந்திரனை பாருங்கள். அண்ணாந்து பார்க்க வேண்டாம். உங்களது கண்களுக்கு நேராக அல்லது அதற்குச் சற்று மேலே வருகிறவரைக்கும் பார்ப்பது நல்லது,

உங்களது வலது கையில் உள்ள பெரு(கட்டை) விரலால் வலது நாசியை அடைத்து, அல்லது இடது கை மோதிரவிரலால் வலது நாசியை அடைத்து இடது நாசியால் சுவாசம் செய்யுங்கள் உங்களால் எவ்வளவு நேரம் சந்திரனை கணிமைக்காமல் பார்க்கமுடியுமோ பாருங்கள். ஐந்திலிருந்து ஏழு நிமிடம் பார்த்தல் போதும். அப்படி பார்த்துவிட்டுக் கண்களை மூடி உள்ளே பார்த்தல் நிச்சயமாக ஒளியை பார்ப்பீர்கள்.

இந்த அனுபவம் மிக மகிழ்ச்சியாக இருக்கும் செய்து பாருங்கள்.

சந்திர யோகம் எவ்வளவு நாள்கள் செய்வது?

இந்தச் சந்திரயோகம் எத்தனை நாள் செய்வது என்றால் மொத்தம் 60 நாள்கள் செய்ய வேண்டும். அதாவது சந்திரயோகம் நவமியிலிருந்து பெளர்ணமி வரை 6 நாள்கள் எனப் பத்துமாதங்கள் செய்ய வேண்டும்

சூரியயோகம்  அறுபது நாள்கள் செய்திட வேண்டும். இதற்குப் பிறகும் நீங்கள் செய்து கொண்டே இருந்தால் உங்களது சக்திகள் கூடிகொண்டே இருக்குமே தவிர வீணாய் போகாது.

சந்திர யோகம்
சந்திர யோகம்

சந்திரயோகம் மற்றும் சூரியயோகம் அறுபது நாள்கள் செய்வது என்பது வாசியோகத்திற்குக்குச் சித்தியாவதர்க்கு போதுமானதாக இருக்கும்.சந்திரயோகம், சூரியயோகம் செய்யும்போது மந்திரகள் சொல்வது அவரவர் பிரியத்தின் படி செய்து கொள்ளலாம்.

கேளப்பா பூரணச் சந்திரனை நோக்கி
கெட்டியாய் நவமி முதல் தொட்டுப்பாரு
ஆளப்பா இடகலையில் சுழினைநோக்கி
அண்ரண்ட தீயேல்லாம் அகன்று போகும்
மாலைப்பா தீபத்திற்ச் சுழினைநோக்கி
மருவியங்கே பார்க்கையிலே ஒளிதான் வீசும்
நாளப்பா அறுபதுதான் இப்படியே பாரு

அடிப்படை வாசியோகத்தில் மனதை மூலதாரத்தில் பார்ப்பது தான் சரியானது ஆனால் இந்தப்பாடலில் சந்திரயோகத்தில் சுழுமுனையில் மனதை வைக்கும் நிலைபற்றிச் சொல்லியிருக்கிறார்கள் சித்தர்கள், இதை எப்படி புரிந்து கொள்வது என்றால் மனதை அந்த இடத்தில் வைப்பது என்பது முக்காரம், நங்கூரமிடுதல், அந்த இடத்தில் நிறுத்துவது,

மனதால் பார்ப்பது என்பது வேறு, மனதை நிறுத்துவது என்பது வேறு. உதாரணத்திற்க்கு ஒருவர் சாலையில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார் இது பார்ப்பது, அதே பெண்ணை மனதில்நிறுத்தி அதோடு தொடர்பு கொள்கிறார் என்றால் அதுவேறு அது சகோதர பாசமா அல்லது நட்பு பாசமா அல்லது காதல் பாசமா இதெல்லாம் அதில் அடங்கும் ஆக மனதில் நிறுத்துவது வேறு பார்ப்பது வேறு. 

நிறைய அன்பர்கள் செய்யும் தவறு இதுதான் இந்த வித்தியாசம் பற்றித் தெரிவதில்லை.

நீங்கள் சந்திர யோகத்தில் சந்திரனை பார்க்கிறீர்கள் லது நாசியை அடைத்து இடது நாசியில் சுவாசத்தை ஓடச் செய்கிறீர்கள் இதனால் சந்திரநாடி உருவாகும் அதிலே தான் நீங்கள் சந்திரனை கண்கொட்டாமல் பார்க்கிறீர்கள்,

அதே மாதிரி சுழினை நோக்கி என்றால் நீங்க அந்தச் சுழுமுனை உள்ளே மனதை நிறுத்துவது என்ற அர்த்தம் அல்ல அந்த இடத்தைக் கண்களை மூடிக்கொண்டு அங்கே நீங்கள் பார்க்கிறீர்கள் அங்கே உங்களுக்கு ஒளி தோன்றும். இதைவிடுத்து சந்திர யோகத்தில் சுழுமுனையில் மனதை வைத்துச் செய்வது நல்லதல்ல இது பைத்தியம் ஆவதற்கு வழிவகை செய்யும்

இதைக் காகப்சுண்டர் மிகத்தெளிவாகக் கூறுகிறார்

"நிநிநூக்கு பார்த்து பார்த்து கேட்டோர்கள் பல கோடி"

சந்திர யோகம்
சந்திர யோகம்

எடுத்தவுடனே சுழுமுனையில் போய் நீங்கள் கவனத்தை செலுத்த கூடாது, அப்படி செலுத்தினால் அது உங்களை உணர்வற்ற நிலைக்குக் கொண்டு போகும் இது எங்கள் குருவாகிய சித்தர் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களுடைய அனுபவம் ஆகக் கூறியிருக்கிறார். 

அந்த அனுபவம் எப்படி இருக்கும் என்றால் சர்க்கரை சாப்பிட்டால் இனிக்காது, வேப்பிலை சாப்பிட்டால் கசக்காது உணர்வற்ற நிலைக்குப் போய்விடும்.

இங்கே நாம் படிப்பது அடிப்படை வாசியோகம் உலக நன்மைக்காக அதனால்  உங்களது குறிக்கோளை முதலில் எதுவென்று முடிவெடுங்கள்.

நீங்கள் முழுக்க முழுக்க யோக நிலைக்கு வந்து நீங்கள் சித்தர் ஆக வேண்டுமா அது வேற பாதை இதிலேயே உயர்ந்த பாதை.

நீங்கள் இந்த உலக வாழ்க்கையில் வெற்றி பெற்றால் தான் நீங்கள் இந்தச் சித்தர் பாதைக்கே வர முடியும்.

ஆக இந்த உலக வாழ்க்கையில் வெற்றி பெற்று முக்தியடைய வேண்டும். முக்தியில் நான்கு வகை உண்டு அதில் சாலோக முக்தி பெற்று அதாவது நீங்கள் முதலில் கடவுளுடைய சன்னிதானத்துக்கு முதலில் வர வேண்டும். அதற்கு அறவழியில் பொருளீட்டி அன்பான இல்லறம் நடத்தி, இந்த அன்பான இல்லறத்தில் நீங்கள் வெற்றி பெற்று அதற்குப் பிறகுதான் நீங்கள் மேல வர முடியும்.

சந்திர யோகம்
சந்திர யோகம்

ஆக எடுத்தவுடனே  சுழுமுனையில் நீங்கள் கவனத்தை வைத்தால் உங்களுக்கு உணர்வு அற்று போய்விடும் உணர்வு அற்று போனதென்றால் உங்களுக்கு இல்லறமும் போச்சு துறவறமும் போச்சு. 

இந்த உணர்வோடு இருக்கக்கூடிய "உலமான சாக்கிரத்தில் ஏறலாமே"

சாக்கிரம் என்றால் உங்களுடைய சுயநினைவோடு நீங்கள் அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். நீங்கள் உணர்வற்ற நிலைக்குச் செல்லுதல் கூடாது அப்படி சென்றால் இல்லறம் அற்றுப்போகும் அதனால் மிகவும் கவனமாகப் பழகுங்கள் சித்தர்கள் நீங்கள் உணர்வற்ற நிலைக்குப் போகக் கூடாது என்கிறார்கள். 

சித்தர் பாடலில் ஒரு வரியை மட்டும் பார்த்து விட்டுப் புரிந்து கொள்ளுதல் தவறை போய் முடியும் அந்த வரிக்கு முன்னும் பின்னும் பார்த்துப் பொருள் கொள்ளுதல் அவசியம். சித்தர்கள் பாடல் வரிகள்மூலம் நம்மை எளித திசை திருப்பிவிடுவார்கள் நாம் இதற்குச் சரியான நபரா என்று,

இதற்குத் தான் நல்ல குரு அல்லது நல்ல வழிகாட்டி வேண்டும்அப்போது தான் சித்தர்களின் பாடல்களில் உள்ள மறைபொருளை உங்களுக்கு எடுத்துக்கூறுவார்கள்.

சந்திர யோகம்
சந்திர யோகம்

மீண்டும் கூறுகிறோம் "எடுத்தவுடனே சுழுமுனையில் போய் நீங்கள் கவனத்தை செலுத்த கூடாது, அப்படி செலுத்தினால் அது உங்களை உணர்வற்ற நிலைக்குக் கொண்டு போகும்." இந்த உணர்வற்றநிலைக்கு சென்றுவிட்டால் உங்களுக்கு இல்லற வாழ்க்கை கிடைக்காது. 

இந்த இல்லற வாழ்வை துறக்க வேண்டுமென்றால் நீங்கள் முதலில் அடிப்படை வாசியோகம் செய்து இல்லறத்தில் வெற்றி பெற வேண்டும் அதன் பிறகு அடுத்த நிலைக்கு வாருங்கள்.

நாம் ஏற்கனவே சூரியயோகத்தில் சொன்னது போல் தான் இதுவும்  இந்தச் சந்திரன் தேய்பிறை மற்றும் வளர்பிறை வருகையில் அந்த ஒவ்வொரு நிலைகளில் அது இருக்கும் வளர்பிறையில் ஒரு நிலையில் இருக்கும் தேய்பிறையில் ஒரு நிலையில இருக்கும் அப்போது அதன் சக்தியில் (நேர்மறை, எதிர்மறை) பாசிட்டிவ், நெகட்டிவ் இருக்கும். அதுதான் அகாரம் உகாரம், அதுதான் விந்து நாதம், அதுதான் கார சாரம் இது எல்லாம் இந்த (நேர்மறை, எதிர்மறை) பாசிட்டிவ், நெகட்டிவின் அடிப்படை தான்.

இந்தச் சந்திரனிலிருந்து இரண்டுசக்தியுமே வெளியில் வரும் அதாவது பாசிட்டிவ் வரும் நெகட்டிவ் வரும் தனித் தனியாக வரும். அந்தப் பாசிட்டிவ் நெகட்டிவ் சேர்ந்து வந்தால் பிரச்சனை இல்லை இது சூரியனில் வரும்,  சந்திரனில் அந்தப் பாசிட்டிவ் தனியாகவும் நெகட்டிவ் தனியாக வரும்.

அதனால்தான் ரொம்ப நேரம் சந்திரனில் இருக்காதே உனக்குப் பைத்தியம் பிடிக்கும் என்பார்கள்.

சந்திர யோகம்
சந்திர யோகம்

இது லூனாடிக் என்ற ஒரு ரிசர்ச் செய்திருக்கிறார்கள். நமக்குத்தேவையான நேர்மறை சக்தி நவமியிளிருந்து பௌர்ணமி வரைக்கும் சந்திரனில் நிறைய கிடைக்கிறது, அந்த நாள்களில் சந்திரன் தெரியவில்லை என்றாலும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். அதனால் சந்திரனிலிருந்து வரும் நேர்மறை சக்திகளை நாமும் கிரகித்துக்கொள்ளலாம் இதனால் மனம் ஒருநிலைப்படும். 

தேய்பிறையில் சந்திரன் நன்றாகத் தெரிந்தாலும் தயவுசெய்து இந்தப்பயிற்சியை செய்ய வேண்டாம் அப்போது சந்திரனில் இரண்டு குணம் உண்டு என்பதால் அந்த நேரத்தில் எதிர்மறை சக்திகள் வெளிவரும் அது நமக்கு நல்லதல்ல 

எங்கள் குருவாகிய சித்தர் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஐயா அவரது  27ம் வயதிலேயே இதில் சித்தியடைந்து அவருடைய உடலையும் உயிரையும் இணைக்கும் ஆன்மா என்ற இறைவனை அவரால் பார்த்தாகக் கூறினார். அந்த அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த இந்த யோகத்தை சித்தர் பெருமக்கள் நமக்கு வழங்கியுள்ளர்கள்.

தன்னை தான் அறிந்து கொள்வான்,

தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,

தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மருந்தீடு + முறிவு பாகம்-1

மருந்தீடு புலிப்பாணி சித்தர் மந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்பது மனதின் திரம் மந்திரம்  தந்திரம் என்பது தனது திறன் தந்திரம். இந்த மனதின் ...