வாசி யோகம் என்றால் என்ன?
வாசியோகம் |
வாசி யோகம் என்றால் என்ன?
யோகம் என்பது இணைத்தல் என்ற பொருள் படும், இணைத்தல் என்றால் உயிர் பொருட்களை இணைத்தல், ஜடப் பொருள்களை இணைப்பது அல்ல.
ஜடப் பொருள்களை இணைப்பது என்பது பௌதிக மாற்றம், வேதியல் மாற்றம் ஆகியவை. பௌதிக மாற்றம், வேதியல் மாற்றம் இதெல்லாம் ஜடப்பொருள் இணைப்பு.
வாசியோகம் |
"அப்படியானால் உயிர் பொருள் இணைப்பு என்பது? அதன் பெயர் தான் யோகம்".
யோகம் என்பது உயிர் பொருள் இணைப்பு, அப்படியானால் எந்த இணைப்பாக இருந்தாலும் அதன் பெயர் யோகம் தானா? நிச்சயமாக யோகம் தான்.
உதாரணமா ஒரு ஆணும் பெண்ணும் இணைகிறார்கள் என்றால் அது பரியங்க யோகம், கட்டில் யோகம், சை யோகம் இதற்க்கு மூன்று பெயர்கள் உண்டு.
இன்னும் ஒரு படி அதிகமா கூறினால் கர்ப்பதானம் இது யோகத்தை விட மேலான ஒரு காரியம் அந்த யோகத்தால் வரக்கூடிய விளைவுகளால் வரக்கூடியது கர்ப்பதானம்.
ஆக இந்த யோகம் என்பது இணையதல்.
வாசியோகம் |
அப்படியானால் வாசி என்றால் என்ன?
வாசி என்றால் காலக் கணக்கோடு நெறிப்படுத்திய சுவாசம்,
நாம் தான் சுவாசம் செய்து கொண்டு தானே இருக்கிறோம்,
அதென்ன கலக்கணக்கோடு நெறிப்படுத்திய சுவாசம்?
நமக்கு இயற்கையாக அமைக்கப்பட்ட சுவாசம் நம்மை மரணத்திற்கு இழுத்துசெல்லக் கூடியது. இந்தச் சுவாசத்தை நெறிப்படுத்தினால் மரணத்திலிருந்தே தப்பிக்கலாம்.
ஆக இந்தச் சுவாசம் என்பது மனிதன் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னுடைய உயிர் சக்தியை இழந்து செல்களில் இருக்கும் உயிர் சக்தியை இழந்து மரணத்தை நோக்கிப் பயணம் செய்யக்கூடிய தானே நடைபெறும் சுவாசம்.
இந்தத் தானே நடைபெறும் சுவாசத்தை நெறிப்படுத்தி அதைக் காலக் கணக்கோடு நெறிப்படுத்த வேண்டும்.
வாசியோகம் |
தானே இயங்கும் மூச்சு காற்றுக்கு சுவாசம் என்று பெயர், சுவாசத்தை நெறிப்படுத்தினால் அதன் பெயர் பிரணாயாமம், அந்தச் சுவாசத்தை காலக்கணக்கோடு நெறிப்படுத்தினால் அதன் பெயர் அதுதான் வாசி
அந்தக் காலக்கணக்கோடு நெறிப்படுத்திய வாசி என்பது உள்ளிழுக்கும் மூச்சு 32 வினாடியும், உள்ளிழுத்த மூச்சை நிறுத்தி வைப்பது 64 வினாடியும், உள்ளே நிறுத்திய மூச்சை வெளியுடுவது 16 வினாடியுமகா இருந்தால் அதன் பெயர் வாசி.
"நீங்கள் ஒரு சுவாசத்தை இப்படி உருவாக்கினால் அதுதான் வாசி உருவாக்குவது".
ஆக வாசியை உருவாக்கி அதைப் பல நிலைகளோடு ஒன்று சேர்த்தல், இணைத்தல். வாசியை உருவாக்கி அதைப் பல நிலைகளோடு இணைத்தல் வாசியோகம்.
ஆக வாசி என்பது காலக்கணக்கோடு நெறிப்படுத்திய சுவாசம். அடிப்படை வாசி என்பது காலக்கணக்கோடு நெறிப்படுத்தி உருவாக்குவது. இது வாசியோகம் செய்ததாக அர்த்தம் அல்ல, வாசியை மட்டும் உருவாக்கியிருக்கிறீர்கள்.
வாசியோகம் |
இந்த வாசியை உருவாக்கியபின் வாசியை ஒவ்வொரு சக்கரங்களிலும் ஒவ்வொரு நிலைகளுடன் அதை இணைக்கும்போது வெவ்வேறு விதமான பலன்களைக் கொடுக்கும்.
அப்படி ஒவ்வொரு பலன்களையும் பெற்று அனுபவிப்பதுதான் அஷ்டமாசித்துகள், 64 சித்துக்கள் இந்தச் சித்துகள் எல்லாம் தானாக நமக்குக் கிடைக்கும் நாமாக அதைத் தேட வேண்டியதில்லை.
ஆக இறுதியில் நாம் எங்குச் சென்று இணைகிறோம்?
கடைசியாக நம்முள் இருக்கும் வாசியை உருவாக்கி அந்தவாசியை கொண்டு நம்முள் இருக்கும் இறைவனை ஒளி வடிவில் காண்பது.
வாசியை உருவாக்கி இறைவனை ஒளிவடிவில் காண்பதற்கு முன், நம்முள் இருக்கும் வாசியே மூலாதாரத்தில் வைத்து மூலாதாரத்தில் மனதை அங்கே வைத்து வாசி உருவாக்கி அங்கே தாரகலையை (குண்டலினி என்பது நம்முள் இயங்கி கொண்டிருக்கும் ஒரு சக்தி அதாவது உயிர் சக்தி, அது மூலாதரத்தில் இருக்கிறது இந்தச் சக்தி அதுவாக இயங்கிக் கொண்டுள்ளது. அதையும் நாம் வாசிக்காற்றைக் கொண்டு குண்டலினியை நெறிப்படுத்தும்போது தான் தாரகலையே உருவாகும், அந்தத் தாரகலை உருவாகி அதில் பயணிக்கூடிய உயிர் சக்திதான் குண்டலினி, இந்தக் குண்டலனி தான் வாலையாக மாறுகிறது, குண்டலினி என்பது நெருப்பும், காற்றும் சேர்ந்த ஒரு அலைவரிசை) உருவாக்கி அங்கே சுழிமுனை நாடியை உருவாக்கி அதன் மூலம் நாம் நம்முள் இருக்கும் இறைவனை ஒளிவடிவில் தரிசிக்கிறோம்.
வாசியோகம் |
நம்முள் இருக்கும் அந்த இறைவனை நீங்கள் ஒளிவடிவில் காண்பதே வாலை. இந்த வாலையை (வாசியை வைத்துக் குண்டலினியை எழுப்பி வாலையாக மாறியபிறகு) கொண்டு நாம் நமது சுழிமுனையில் (சுழிமுனை: அடுத்து வரும் படங்களில் காண்போம்) அமிர்தம் சுரக்கச்செய்து அந்த அமிர்தத்தை உண்டு நீண்ட ஆயளுடன், இளமையுடன் வாழ்வதுதான் இந்த அடிப்படை வாசியோகத்தின் குறிக்கோள்.
ஆக வாலை தெய்வத்துக்கு மனோன்மணி தாயென இது போன்ற நிறைய பெயர் உண்டு. அருட்பெருஞ்ஜோதி என்ற பெயரும் உண்டு அருட்பெருஞ்ஜோதி என்பது வேறு எதுவும் இல்லை நமக்குள் இருக்கும் இறைவன் தான்.
ஆகத் தன்னுள் இருக்கும் இறைவனை இறைவனோடு இணைதல் அடிப்படை வாசி யோகம்.
இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
வாசியை மூலதாரத்தில் நிறுத்தி அங்கே நெருப்பையும், காற்றையும் ஒன்றாகச் சேர்த்து அங்கே நாம் ஒரு அலைவரிசையை உருவாக்குகிறோம்.
நாம் உருவாக்கும் காற்றும், வெப்பமும் சேர்ந்த அலை தான் குண்டலனி(உயிர் சக்தி), இந்தக் குண்டலினி தாரகலையாக உருவாகி சுழுமுனையில் பயணிக்கும்.
இப்படி பயணிக்கையில் மேலும் நாம் அதை அழுத்தும்போது, அதாவது இந்தக் குண்டலியை அழுத்த வேண்டும் அப்பொழுதுதான் அது வாலையாக மாறும், அப்படி வாலையாக மாறயில் தான் அது ஒளிரும்.
வாசியோகம் |
இதில் காற்றும், வெப்பமுமாக இருக்கும் இதை அனேகம்பேர் உணர்த்திருப்பர்கள். காற்றும், வெப்பமும் தான் குண்டலினியை உருவாக்கக்கூடியது. இந்தக் குண்டலினி என்பது வாசியோகம் அல்ல,
குண்டலனி என்பது வாலைக்கு முற்பட்டது, வாசியை உருவாக்கியபின் அந்தத் தானே இயங்கக்கூடிய குண்டலினியை நாம் நமது கட்டுபாட்டுக்கு கொண்டுவந்து நாம் இயக்குகிறோம். அப்படி அதை இயக்கையில் அது வாலையாக உருவாகும்.
அனைவருக்கும் இந்தக் குண்டலினி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இது வேலை செய்யவில்லை என்றால் நாம் உயிருடன் இருக்க முடியாது. அதே போல் சக்கரங்கள் வேலை செய்யவில்லை என்றாலும் நாம் உயிருடன் இருக்க முடியாது.
இந்தச் சக்கரங்களும், குண்டலினியும் வேலை செய்துகொண்டுதான் உள்ளது. ஆனால் அது தனிச்சையாக நாம்மை தினம் தினம் அழிவிற்க்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் இயங்கிக்கொண்டிருக்கிறது.
அதை அழிவிற்க்கு எடுத்துச் செல்லாமல் தடுத்து அதை நெறிப்படுத்தி நமது கட்டுபாட்டுக்கு கொண்டு வரச்செய்வது தான் இந்த வாசி.
வாசியைக் கொண்டு குண்டலினியை உருவாக்கி, குண்டலினியிலிருந்து வாலையை உருவாக்கி அதை நமக்குள்ளே பார்த்து, அந்த வாலையிலருந்து அமிர்தம் உருவாக்கி அதை உண்டு இளமையோடும், மிகுந்த அறிவோடும், நீண்ட ஆயளோடும், இன்பமான இல்லற உறவோடு வாழக்கூடிய ஒரு யோகம் தான் வாசியோகம்,
வாசியோகம் |
வாசியோகம் என்றால் என்ன என்பது உங்களுக்கு மிகதெளிவாகக் குறிப்பாக அடிப்படை வாசியோகம் பற்றிப் புரிந்திருக்கும் என நம்புகிறோம்.
இந்த அடிப்படை வாசியோகம் என்பது இந்த உலக வாழ்க்கையில் நீங்கள் அணைத்து வெற்றியைப் பெறுவதற்காகவும், சக்திசளியாக விளங்குவதற்காகவும், புத்திசாலியாக விளங்குவதற்காகவும், உயர்ந்த நிலையை அடைவதற்ககவுமான ஒரு பாதை.
இதில் நிறைய சித்திகள் கிடைக்கத்தான் செய்யும் அவற்றை எல்லாம் உதாசினம் செய்ய வேண்டும். இறையருள் பெறுக!
தன்னை தான் அறிந்து கொள்வான்,
தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,
தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக