வெள்ளி, 17 மே, 2024

வாசியோகம் மூலம் உடல் மற்றும் மனதை செம்மையாக்கும் சித்தர் ரகசியங்கள் - சூரிய யோகம்

வாசியோகம் மூலம் உடல் மற்றும் மனதை செம்மையாக்கும் சித்தர் ரகசியங்கள்

சூரிய யோகம்

பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டி சித்தர்

வாசியோகம் செய்வதற்கான வழிமுறைகளில் சில வழிமுறைகளை அதாவது ஆரம்பகட்ட வழிமுறைகளை காண்போம், அதில் குறிப்பாக வாசியோகம் செய்வதற்கு முதலில் உடலையும் மனதையும் இணைக்க வேண்டும், இந்த உடலையும் மனதையும் இணைக்கக்கூடிய அந்த தொழில்நுட்பம் என்ன என்பதை இந்த பாடங்களிலும்  இனிவரும் பாடங்களிலும் பார்க்கலாம்.

இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பதை நாம் பார்க்கலாம்.

சித்தர் முறையில் வாத, பித்த, கபம் நீக்கும் பயிற்சிகள்

வாசியோகம் செய்தல் உடல் அழியாமல் பாதுகாக்கும் என சொல்கிறோம் அப்படியானால் உடல் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் உடலை அழிக்கக் கூடியது எது? என்பதை தெரிந்தது கொள்ளவேண்டும், 

உடலை அழிக்கக்கூடியதை சித்தர்கள் மிக அருமையா முத்தோஷம் என சொல்லி உள்ளார்கள்.

இந்த முதோசம் என்றால் "வாத, பித்த, கபம்",

இந்த வாதம் என்பது வந்து இடுப்பில் இருக்கிற நீர்.

இந்த பித்தம் என்பது சென்னியில் இருக்கிற நீர், 

இந்த கபம் (சிலேத்துமம்) என்பது எங்கு இருக்கிறதென பார்த்தால் கபாலத்தில் இருக்கும் சுழிமுனையில் இருந்து கீழே மூலாதாரம் வரைக்கும் இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் இந்த கபம் என்ற சளி படலம் இருக்கிறது, இந்த சளிப்படலாம் தன் சிலேத்துமம்.

ஆக இந்த மூன்று தோஷம் வரக்கூடாது, மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இந்த "வாத, பித்த, கபம்" சமநிலையில் இருந்தால் நமது உடல் அழியாமல் இருக்கும்.

ஆனால் இந்த சமநிலை தவறியது என்று சொன்னால் மனித  உடலை  அழிக்கக்கூடிய காரணியாக இருக்கும்.

இந்த முத்தோஷத்தையும் போக்கக்கூடிய வழிமுறைகளை நம் சித்தர்கள் மிக எளிமையாக சொல்லியுள்ளார்கள்.

இந்த முத்தோஷத்தைப் போக்குவதற்கு மூன்று கல்பங்களை சித்தர்கள்  சொல்லியுள்ளார்கள். 

கல்பம் என்றல் என்ன?

சூரிய யோகம்
சூரிய யோகம்

கல்பம் என்றல் "PREVENTIVE, CURATIVE, REGENERATIVE" இது என்னவென்றால்

  • "PREVENTIVE"       : நோயை உருவாகாமல் தடுப்பது
  • "CURATIVE"             : நோயை குணப்படுத்துவது
  • "REGENERATIVE" : உடலை புத்துயுர் செய்தல்

இந்த மூன்றும் சேர்ந்து செய்வதுதான் கல்பங்கள்.

இந்த கல்பங்களில் முக்கியமான மூன்று கல்பங்கள்  இந்த முத்தோஷத்தை போக்க கூடியதாக இருக்கிறது.

அந்த கல்பங்கள் எதுவென்றால் கரிசாலை, கத்தாழை, கடுக்காய் இந்த மூன்று "க"வும் மிக முக்கியமான "க",  இந்த முத்தோஷத்தை போக்கக்கூடிய முறைக்கு பெயர் வழலை வாங்கல்,

வழலை என்றால் என்ன?

இந்த மூன்று தோஷங்களும் நமது உடலில் வழவழ கொழகொழவென்று ஒரு வகையான சளி படலங்களை உற்பத்தி செய்யும் இதுதான் விஷம். இந்த விஷம் உடம்பில் ஏற ஏற ஏற ஏற மனிதன் வயதாகியும் நோய் வாய்ப்பட்டும் இறக்கிறான். உடலில் இருக்கக்கூடிய இந்த விஷயங்களை நாம் வெளியேற்றி விட்டால் நம் உடல் உறுதியாக ஆரோக்கியமாக இருக்கும்.

ஆக இந்த வழலையை வெளியேற்றுவதற்கான அந்த வழிமுறைகள் தான் வழலை வாங்கல், இந்த வழலை வாங்கல் மூலமாக நாம் இந்த உடளில் உள்ள கழிவுகளை நீக்கி சுத்தப்படுத்தலாம்.

(நாம் வழலை வாங்கல் பற்றி விரிவாக அடுத்து வரும் பாடங்களில் பார்க்கலாம்).

நாம் உடல் சுத்தப்படுத்தும் முறையை பற்றிப் பார்த்தோம், இனி  மனதை பற்றிப் பார்ப்போம்.

மனம் என்றால் என்ன? 

மனம் என்பது என்னவென்றால் இது ஒரு DATA BASE ஐம்புலன்களினால் வரக்கூடிய செய்திகள் அதாவது கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் இந்த ஐந்து செயல்கள் தான் மனம், கண்டு கேட்டு நமக்காகப் பார்ப்பது, கேட்பது, சுவைத்து உணர்வது, வாசனைகளை நுகர்வது, நமது உடல் உணர்ந்து அறியக்கூடியது, நல்ல ஒரு குளுமையான காற்று நம்மீது படும்போது சந்தோசமாக உணர்கிறோம், ஆக இது எல்லாமே உணர்தல், இந்த ஐந்து உணர்வுகளில் கிடைக்கக்கூடிய இந்த அனுபவங்களைத் தொகுத்து வைப்பது தான் மனம்.

ஆக மனம் என்பது உணர்வு சார்ந்தது, இந்த மனதை நாம் அழித்து விட முடியாது, மனம் அழிந்தால் உடல் அழியும். இந்த மனம் இல்லை என்றால் எதுவுமே இல்லை, இந்த மனதை வைத்துதான் நாம் எதையும் செய்ய முடியும். ஆக இந்த மனதை  நெறிப்படுத்திக் குவிக்க வேண்டும்,

சூரிய யோகம்
சூரிய யோகம்

சித்தர்கள் சொன்ன மனதை  நெறிப்படுத்திக் குவிக்கும் தொழில்நுட்பங்கள் தான் நாம் பார்க்கப்போகிறோம், நம் மனதை பற்றி அகத்தியர் மிக எளிமையாகக் கூறியிருக்கிறார்.

“மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்

மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்

மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்

மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே”

இந்த பாடலை மேலோட்டமாக பார்த்தல் மனதை செம்மைபடுத்திவிட்டால் மந்திரப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, வாசிப்பயிற்சி இவைகள் எல்லாம் தேவையே இல்லையே எனத்தோன்றும் அனால் பொருள் அது அல்ல. மனதை செம்மை படுத்து, செம்மை படுத்து என்று எளிதாக சொல்லிவிட்டும் போகலாம். 

மனம் செம்மை என்றால் என்ன? 

(ஆக மனம் செம்மைப்படுத்தினால் எதுவுமே வேண்டாம் என்பது உண்மை,)

மனம் எப்போது செம்மையாகும்?

மேலே உள்ள பாடலுக்கு அடுத்து பல பாடலுக்கு பிறகு சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் மனம் எப்போது செம்மையாகும் அதுக்கு அடுத்த பாடல்களுக்கு பிறகு என்ன சொல்கிறார் என்றால் சுழுமுனை திறந்தால் மனம் சுழியில் அகப்பட்ட துரும்பு போல் ஒடுங்கும்

இந்த மனம் எப்பொது ஒடுங்கும்?

இதற்கு சுழுமுனை திறக்கவேண்டும் அப்போது மனம் ஒடுங்கும்

சுழுமுனை திறக்கவேண்டுமென்றால்?

வாசியோகம் செய்யவேண்டும். 

ஆக மனதை செம்மைபடுத்தும் முறை, மனதை ஒருநிலைப்படுத்தும் முறை, மனதை குவிக்கக்கூடிய முறையை நமது சித்தர்கள் நிறைய பயிற்சிகள் செய்து அந்த அனுபவத்திற்குப்பிறகு நமக்கு சொல்லியுள்ளார்கள். 

திராடகா பயிற்சியை நமது வள்ளலார் செய்திருக்கிறார்கள், விவேகானந்தர் செய்திருக்கிறார்கள், சிருங்கேரி  சுவாமிகள் செய்திருக்கிறார்கள், யோகி ராம்சுரத்குமார் அவர்கள்  செய்திருக்கிறார்கள், சங்கராச்சாரியார் சுவாமிகள் செய்திருக்கிறார்கள் இது மாதிரி நிறைய ஞானிகள் யோகிகள் எல்லோரும்  இந்த திராடகம் பயிற்சியை  செய்திருக்கிறார்கள்.

இந்த திராடகா பயிற்சி என்பது மிக எளிமையான பயிற்சி இதில் மனம் நன்கு குவியும்.

சித்தர் ரகசியங்கள்
சித்தர் ரகசியங்கள்

இது செய்வது எப்படி?

நீங்கள் மிக அமைதியாக வீட்டில் ஓர் இடத்தில் உட்கார்ந்து சுவற்றில் ஒரு புள்ளியை வரைந்து வைத்து அதை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பது ஒரு பயிற்சி.

அடுத்த பயிற்சி உங்களுக்கு பிடித்த கடவுள் அல்லது சித்தர் படத்தை வைத்து அதில் அவர்கள் கண்களை மட்டும் கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருப்பது இது மிக முக்கியம்.

இதற்க்கடுத்தப்பயிற்சி ஒரு விளக்கு அல்லது ஒரு மிகச்சிறிய LOWEST VOLTAGE BULB அதை எரிய விட்டு அதை தொடர்ந்து பாருங்கள்.

இதை எவ்வளவு நேரம் பார்க்கலாம்? அப்படியென்ற ஒரு கேள்வி வரும் அதற்க்கு 5-ல் இருந்து 7 நிமிடம் வரைக்கும் பார்க்கலாம். ஆரம்பத்தில்  கண்களிருத்து நீர் வடியும் பிறகு வடியாது. அதற்கு பிறகு அந்த ஒளியே உங்கள் கண்களை மூடினால் உங்களுக்குள் தெரியும். 

சித்தர் இராஜாகிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்களிடம், சில சித்தர்களிடம் எப்படி பேசுவது என்று கேட்கையில் அவர் கூறிய வழிமுறை என்னவென்றால் ஒரு விளக்கை ஏற்றி வைத்து அல்லது ஒரு சித்தர் படத்தை வைத்து அதன் முன்  அமர்ந்து திராடகம் செய்தால் அதாவது இமைக்காமல் திராடகம் செய்துவிட்டு, உங்களுக்கு தேவையானது என்ன கேள்வியோ அதை கேட்டுவிட்டு அதன் பிறகு தூங்கி காலையில் எழும்போது உங்களுக்கு விடை கிடைக்கும் என்றார். அதாவது சித்தர்கள் வந்து சொல்லுவார்கள் இது ஒரு முறை: இது திராடகா.

இந்த திராடகம் தான் நமது கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் ஓம் என எழுதி வைத்திருப்பார்கள் அங்கு இருட்டு அறை போல் இருக்கும், அந்த இடத்தில் அமர்ந்து ஓம் என்பதை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் இதனால் தியானம் நன்கு கைகூடும் இதுவும் திராடகம் தான்.

சித்தர்களின்: சூரிய யோகம் மற்றும் திராடகா

இந்த திராடகம் செய்தப்பிறகு நாம் சூரியயோகம் செய்யவேண்டும். இது மிகவும் சக்தி வாய்ந்த யோகம், இந்த சூரியயோகத்தை நாம் செய்யும் போது நமக்கு அளப்பரிய சக்திகள் கிடைக்கும். 

ஸ்ரீ ராமர்
ஸ்ரீ ராமர்

இந்த சூரியயோகத்தை ஸ்ரீ ராமன் செய்திருக்கிறார், ஸ்ரீ ராமன் சூரியயோகம் செய்து ராவணனை வீழ்த்தியதாக ஆதித்ய ஹிருதயம் பாடி ராவணனை வீழ்த்தியதாக ஒரு செய்திகளும் உண்டு.

ஆதித்ய ஹிருதயம் என்பது வெற்றி தரக்கூடியது, நீங்கள் எதில் வெற்றி பெறவேண்டுமோ அதற்கு முன் இந்த சூரியயோகத்தை செய்துவிட்டு அந்த காரியத்தை செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

இந்த சூரியயோகத்திற்கு அளப்பரிய சக்தி உண்டு இதை விஞ்ஞான ரீதியாக பார்த்தோம் என்றால் நமக்கு சூரிய ஒளியிலிருந்து நமது உடல் விட்டமின் "டி"யை உற்பத்தி செய்கிறது, உற்பத்தி செய்யும் இந்த விட்டமின் "டி" என்ன செய்கிறதென்றால் நாம் சாப்பிடுகிற எல்லா உணவுகளிலும்ம் இருக்கக்கூடிய கால்சியத்தை கொண்டு எலும்புகளில்  சேர்க்கிறது இதனால்  எலும்பு மஜ்ஜை பலப்படுத்துகிறது. 

எலும்பு மஜ்ஜை தான் நம் உடல் மிகுந்த சக்தி பெறுவதற்கும் நமது    உடல் அழியாமல் நிலைத்து இருப்பதற்கும் முக்கிய காரணங்களாகும்.

சூரிய யோகம்
சூரிய யோகம்

ஆக இந்த சூரிய யோகம் எப்படி செய்வதென்று இப்பொழுது பார்ப்போம், சூரிய யோகம் செய்வதற்கு நீங்கள் காலையில் 6 லிருந்து 8 மணியில் இருக்கக்கூடிய இளம் சூரியனை பார்ப்பது மிக நல்லது.

இந்த இளம் சூரியனை பார்ப்பது குறிப்பாக பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் பார்ப்பது  சிறப்பு, இதை எப்படி பார்ப்பது என்றால், நீங்கள் ஏற்கனவே திராடக செய்து ஓரளவுக்கு வெற்றி பெற்று இருப்பீர்கள்,  இப்போது இதை நீங்கள் பார்க்கையில வலது கை மோதிர விரலை வைத்து இடது புற நாசியை அடைத்து வலதுபுறம் நாசியில் சுவாசியுங்கள், இப்படி வலது புற நாசியில் சுவாசித்தால் இது சூரியகலை சுவாசம்.

இந்த சூரியகலை சுவாசம் பிங்கலை சுவாசம் என்ற பெயரும் உண்டு, இந்த சூரியகலை சுவாசம் செய்கையில் சூரியகலை நாடி உருவாகும், இந்த சூரியகலை நாடி சூரியனுடைய சக்தியை உங்கள் உடம்பிற்கு கொண்டு போய் சேர்க்கும், இதுதான் சூரிய யோகதினுடைய அடிப்படையான விஞ்ஞான உண்மை.

அதை எப்படி செய்யவேண்டும் முதலில் நீங்கள் சூரியகலையில் சூரிய நாடி உருவாக்கி இருக்கிறீர்கள் இப்போது சூரியனை கணிமைக்காமல் பாருங்கள், சூரியனை மேகம் மறைத்திருத்தலும் பரவாயில்லை முதலில் சிறிது நேரம் தான் பார்க்கமுடியும் அதனால் கவலை வேண்டாம் பழக பழக நன்கு பார்க்கமுடியும், கொஞ்சம் கொஞ்சமா நேரம் கூட்டிக்கொண்டே பழகுங்கள் கண்களில் நீர் வழியும் பிறகு நீர்வழிதல் நின்று விடும். இதன்பிறகு நீங்கள் சூரியனை வட்டமாகவே பார்க்கலாம் சந்திரனை பார்ப்பது போல் வட்டமாகவே பார்க்கலாம்.

நீங்கள் அப்படி பார்த்துவிட்டு கண்ணை மூடி உங்களுக்கு உள்ளே மனக்கண்ணால் பார்த்தால் ஒளி தெரியும். ஆக இந்த உள்ளொளியை உங்களால் காணமுடியும். 

ஆக இந்த சூரிய யோகத்தை நீங்கள் முதலில் ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் பாருங்கள் பிறகு அதிகபட்சமாக ஒரு ஆறு அல்லது ஏழு நிமிடம் வரைக்கும் நீங்கள் பயிற்சி செய்யலாம். இந்த ஏழு நிமிடம் செய்தாலே போதும். 

சூரிய யோகம்
சூரிய யோகம்

நீங்கள் இந்த சூரிய யோகம் செய்து முடித்தப் பிறகு நல்ல ஒரு கோரைப் பாயோ அல்லது ஒரு போர்வையை விரித்து, அதற்கு  மேல் உட்கார்ந்து உங்களால் எவ்வளவு மூச்சு இழுக்க முடியுமோ இழுத்து, மூச்சு எவ்வளவு நிறுத்த முடியுமோ நிறுத்துங்கள், எவ்வளவு மூச்சு வெளியிட முடியுமோ  வெளியிடுங்கள். இதை ஏழு நாள்களுக்கு செய்யுங்கள் இதுதான் ஆரம்பம் இந்த சூரிய யோகத்தின் உடைய ஆரம்பம்.

அடுத்த பாடங்களில் சந்திரயோகம் பற்றி பாப்போம் நன்றி

தன்னை தான் அறிந்து கொள்வான்,

தன் சக்தியை உணர்ந்து கொள்வான்,

தன் இலக்கை நோக்கி முன்னேறுவான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மருந்தீடு + முறிவு பாகம்-1

மருந்தீடு புலிப்பாணி சித்தர் மந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்பது மனதின் திரம் மந்திரம்  தந்திரம் என்பது தனது திறன் தந்திரம். இந்த மனதின் ...