வியாழன், 27 ஜனவரி, 2022

உயிர் எங்கே இருக்கிறது? உயிரும் ஆன்மாவும் ஒன்றா? Where is the Soul?

 உயிர் எங்கே இருக்கிறது? உயிரும் ஆன்மாவும் ஒன்றா?

Kosam
Where is the Soul?

உயிர் எங்கே இருக்கிறது? உயிரும் ஆன்மாவும் ஒன்றா?

"உயிர் என்பது ஆன்மாவின் ஒரு பகுதி"

ஆன்மா என்பது இந்த பிரபஞ்சம் உற்பத்தியாவதற்கு முன்பு எது இருந்ததோ அது தான் உண்மையான சக்தி அது தான் உண்மையான ஆன்மா அதுவே நிலையான ஆன்மா. 

அந்த ஆன்மாவைத்தான் திருமூலர் பதம் என்கிற வார்த்தையில் கூறுகிறார் இந்தப் பதம் என்றால் பாகுபதம் அல்லது கம்பி பதம் என்று ஒரு நிலை அல்லது அளவை குறுப்பிடுவதற்கு பயன்படுத்தும் இந்த வார்த்தையாகத் திருமூலர் இறைவனை எந்தப் பதத்தில் இருக்கிறாரெனப் பதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கூறுகிறார்.

பிரபஞ்சம்
பிரபஞ்சம்


தொம்பதம் : இறைவன் இந்தப் பிரபஞ்சம் உற்பத்தியாவதற்கு முன் இருந்த நிலை இதுவே அனைத்திற்குமான ஆன்மா. ஆன்மா என்பது சக்தி வடிவம், ஆக இந்தத் தொம்பதம் தான் நமது ஆன்மா.

தற்பதம் : தொம்பதத்தின் ஒரு பகுதி இந்தப் பிரபஞ்சமாக மாறுகையில் பூமி, மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் உருவாகினார்கள். 

மனிதர்களுக்கு உள்ளே இருக்கும் ஆன்மாவின் பெயர்தான் தற்பதம் அல்லது தம்பதம் எனக் கூறுகிறார்கள் சித்தர்கள். 

மனிதனுக்குள்ளே இருக்கும் ஆன்மா ஜீவான்மா ( சிவன் ), இந்த மனிதனுக்குள் இருக்கும் ஆன்மா (ஜீவான்மா) மற்றும் உயிர் வேறாக இருக்கிறது அதாவது மனிதனுக்கு உள்ளே இருக்கயில் ஜீவான்மாவாகவும் உயிராகவும் இருப்பது தற்பதம். 

இந்தப் பிரபஞ்சம் உருவானப்பிறகு எங்கும் பரவியிருப்பது பரமாத்மா இந்தப் பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு இருந்தது தான் நிரந்தர ஆன்மா அது தான் சக்தி ஆதிபராசக்தி என்று சித்தர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். மனிதனுக்குள்ளே இருக்கயில் ஆன்மா வேறு உயிர் வேறு.

சரி ஆன்மா மனித உடலில் இருக்கிறது என்கிறார்களே தினம்தினம் சர்ஜரி நடக்கிறது பிண ஆய்வு நடக்கிறது அதில் கண்டுபிடிக்க முடியவில்லையே அப்படியானால் எங்கே ஆன்மா இருக்கிறது? 

இந்தக் கேள்விக்குச் சித்தர்கள் மிக அருமையா தெளிவாகப் பதில் சொல்லியுள்ளார்கள். அதாவது சித்தர்களின் பதில்களில் மிக முக்கியமானது எது வென்றால் மனிதன் என்பது 96 தத்துவங்களைக் கொண்டது. 

அதாவது இறைவன் மாறுபட்ட 96 தத்துவங்களாக மனிதனாக இருக்கிறான். ஆக இந்த 96 தத்துவங்களில் ஐந்து அடுக்கு கொண்டது நமது உடல் அதைக் கோசங்கள் எனக்கூறுவார்கள் அவைகள் 

  • அன்னமயக்கோசம்
  • பிராணமயக்கோசம்
  • மனோமயக்கோசம்
  • விஞ்ஞானமயக்கோசம்
  • ஆனந்தமயக்கோசம் 

என ஐந்து கோசங்களாகப் பிரித்திருக்கிறார்கள். இந்த ஐந்து கோசங்கள் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கிறது. 

அன்னமயக்கோசத்திற்குள் பிராணமயக்கோசம் இருக்கிறது, பிராணமயக்கோசத்திற்குள் மனோமயக்கோசம் இருக்கிறது, மனோமயக்கோசத்திற்குள் விஞ்ஞானமயக்கோசம் இருக்கிறது, விஞ்ஞானமயக்கோசத்திற்குள் ஆனந்தமயக்கோசம் இருக்கிறது இந்த ஆனந்தமயக்கோசத்திற்குள் தான் இறைவன் நமக்குள் இருக்கிறான் ஆன்மா இருக்கிறது இரண்டும் அங்குதான் இருக்கிறது. 

இது நமது உடல் முழுவதும் பரவியுள்ளது உள்ளுக்குள்  உள்ளுக்குள் உள்ளுக்குள் எனப் பரவியுள்ளதே தவிர இதைத் தனியாகப் பிரித்து எங்கும் பார்க்க முடியாது. 

ஆன்மா
ஆன்மா

அப்படி தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் யோக நிலையில் தான் பார்க்க முடியும் அப்படி நீங்கள் யோகநிலையில் துரிய தியானத்தில் தான் அருமையாக உங்களது ஆன்மாவையும் பார்க்கலாம் உங்களது உயிரையும் பார்க்கலாம். 

இப்போது உங்களுக்கு எங்கே உயிர் இருக்குறது மற்றும் ஆன்மா இருக்கிறது எனப் புரிந்திருக்கும் என நம்புகிறோம். 

உயிர் எப்படி இருக்கிறது என்றால் இறைவன் தன்னைத்தானே இப்பிரபஞ்சமாக மாற்றிக்கொள்ளும்போது அகார, உகார, மகார, நாத, விந்தாக இருந்தார் இந்த நாத விந்து என்கிற இரண்டு துகள் அதாவது உயிர் துகள்கள் நாதம் என்பது பாசிட்டிவ் உயிர்த்துகள் விந்து என்பது நெகட்டிவ் உயிர்த்துகள் இந்து இரண்டும் சேரும்போது உயிர் ஆற்றலாக இருக்கிறது. ஆக இந்த உயிர் துகளைபற்றிப் பேசியிருக்கிறார்கள் சித்தர்கள் இந்தப் பார்ட்டிகல்ஸ் விஞ்ஞானத்தை தான் சொல்கிறார் திருமூலர்.

இவைகள் எல்லாம் சித்தர்களுடைய கோட்பாடு இதை மறுக்கலாம் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிருபிக்கலாம் இது அவரவர்களுக்கு விருப்பப்பட்டது இவைகளெல்லாம் சித்தர்களால் நிருபிக்கப்பட்டது.


தான் அவன் ஆகுக!
தான் அவன் ஆகுக!!
தான் அவன் ஆகுக!!!

சித்தர் இராஜா கிருஷ்ணமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மருந்தீடு + முறிவு பாகம்-1

மருந்தீடு புலிப்பாணி சித்தர் மந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்பது மனதின் திரம் மந்திரம்  தந்திரம் என்பது தனது திறன் தந்திரம். இந்த மனதின் ...