வாசியோக நிலைகள் என்னென்ன?
|
வாசியோகம் |
மூச்சுப்பயிற்சி இன்னும் குறைக்கவேண்டுமா?அல்லது கூட்டவேண்டுமா?
முதலில் மூச்சுப்பயிற்சி என்பது:
இந்த மூச்சுப் பயிற்சிகள் இதுவரைக்கும் நிறைய பேர் அவரவர்கள் விருப்பத்திற்கு சொல்லி அவரவர்கள் விருப்பத்திற்கு செய்து, ஒவ்வொருவரும் நான் உனக்கு அந்த நிலை கொடுத்துவிட்டேன் இந்த நிலை கொடுத்துவிட்டான் என்றும், மற்றும் பாட்டம் எல்லாம் கொடுத்து எப்படி எப்படியோ இருக்கிறார்கள் அதனால் அவர்களுக்கும் அவர்கள்மூலம் கற்றவர்களுக்கும் சித்தர்களின் வாசியோகம் குழப்பமாகத்தான் இருக்கும்.
மற்றவற்றையெல்லாம் தூக்கி எரிந்து விடுங்கள்.
வாசியோகம் என்பது அட்டாங்கயோகம் என்று சொல்லியிருக்கிறோம் அதில் மூச்சுப் பயிற்சி என்பது நான்காம் நிலை.
முதல் இரண்டு நிலைகள் இயம நியமம் அதனை ஏற்கனவே உங்களுக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டோம். ஆசனம் மூன்றாவது நிலை இந்த ஆசனம் என்பது எண்ணிலா ஆதனம் அவற்றில் சூரிய நமஸ்காரம் பன்னிரண்டு நிலை கொண்டது அவற்றைச் செய்தால் போதும். இது அடுத்த வரயிருக்கும் பாடங்களில் சொல்கிறோம்.
|
சூரிய நமஸ்காரம் |
இந்த ஆசனத்துக்குப் பிறகுதான் பிராணயாமம் இந்த மூன்றும் முதலில் சரியாக இருக்க வேண்டும். முதல் இருண்டும் இயமம் நியமம் இவை நம்முடைய தினசரி நடைமுறை இவற்றைக் கடைபிடித்து நீங்கள் நல்லவர்களாக இருப்பதால் தான் இங்கே வந்துள்ளீர்கள் இல்லையென்றால் இங்கு வர முடியாது, அதனால் நீங்கள் எல்லாருமே இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட உயர்ந்த மனிதர்கள் அதில் துளிகூட சந்தேகம் வேண்டாம், அப்படி இல்லாதவர்கள் இங்கு வர முடியாது.
அடுத்தாகப் பிரணாயாமம் எப்படி செய்வது என்பது ஒரு பெரிய விசயம் இவை அனைத்தையும் பாடங்களாக அடுத்து வரும் பதிவுகளில் வரும் அவற்றைப் படித்துப்பாருங்கள் மேலும் சந்தேகம் எழுந்தால் கேளுங்கள்.
வாசியோக நிலைகள்:
நாம் கூறும் வாசியோகம் என்பது சிவன் செய்த வாசியோகம், முருகன் செய்த வாசியோகம், அகத்தியர் செய்த வாசியோம், போகர் செய்தது திருமூலர் செய்தது அந்த வாசியோகத்தை தான் நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.
நாம் எடுத்தவுடன் அவர்கள் செய்த வாசியோகத்தை நாம் செய்திட முடியாது அவற்றைப் படிப்படியாக எப்படி செய்ய வேண்டும் அவர்களே சொல்லிகொடுத்திருக்கிறார்கள், அந்தப் படிநிலையிலிருந்து மூலாதாரத்திலிருந்து செய்யக்கூடிய வாசியோகம் என்பது அடிப்படை வாசியோகம்.
இந்த அடிப்படை வாசியோகத்தினால் இந்த உலகத்தில் கிடைக்கக்கூடிய எல்லா நன்மைகளும் கிடைத்துவிடும் உலகத்தில் நீங்கள் உயர்ந்த நிலைக்குப் போகலாம், இந்த வாசியோகம் செய்பவர்களுக்கு வறுமை வராது, உங்களுக்கு எந்த விதமான துன்பங்கள் வந்தாலும் சித்தர்கள் உதவி செய்வார்கள், எல்லாவிதமான காரியங்களிலும் வெற்றிகிடைக்கும், இது போக உங்களுக்கு அபூர்வ சக்தியும் கிடைக்கும்.
இவைகளெல்லாம் இந்த அடிப்படை வாசியோகத்தில் உலக வாழ்க்கையோடு இன்பமான இல்லற வாழ்க்கை கிடைக்கும், அதில் வரக்கூடிய துன்பங்கள் எல்லாம் தன்னாலேயே விலகிப்போவதற்கு சித்தர்கள் உதவுவார்கள். இவைகள் எல்லாமே இந்த அடிப்படை வாசியோகத்தில் கிடைக்கும்,
அதுமட்டுமல்ல இந்த அடிப்படை வாசியோகத்தில் முக்தியும் கிடைக்கும். முக்தி என்பதில் நான்கு நிலை உண்டு இவற்றை அடுத்து வரும் பாடங்களில் தெரிந்து கொள்ளலாம். இந்த அடிப்படை வாசியோகத்தில் சாலோக முக்தி உண்டு, இந்தச் சாலோக முக்தி என்றால் இறைவனுடைய இடத்தை அடையக்கூடிய முக்தி, இந்த முக்தி அடிப்படை வாசியோகத்தில் கிடைக்கும்.
மேல்நிலை வாசியோகம் :
|
சித்தர்கள் |
இந்த மேல்நிலை வாசியோகம் என்பது மூலாதாரத்திலிருந்து வாசியோகம் செய்வது போல் ஒவ்வொரு ஆதார புள்ளிகளிலிருந்து வாசியோகம் செய்து திரும்ப மூலாதாரத்திற்கு ஏற்றி இறக்கி அப்படியென்று திருமூலர் சொல்கிறார். ஆனால் இவற்றை நிறைய பேர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்கூற்றை யுதைக்குங் குறியது வாமே
பாடல் எண் : 8
அப்படியென்று அவர் பாடி இருக்கிறார் இதுதான் இந்த மேல்நிலை வாசியோகம்.
இந்த மேல்நிலை வாசியோகம் ஒவ்வொரு ஆதாரத்தளங்களிலும் நின்று வாசியோகம் செய்து முடித்து மீண்டும் மூலாதாரத்திற்கு வந்து சேர்வது இதை வலம் சுற்றல் என்று சித்தர்கள் கூறுவார்கள் இதில் இடம் சுற்றல் என்று இருக்கிறது அவற்றை அடுத்து வரும் பாடங்களில் தெரிந்து கொள்ளலாம். இது மேல்நிலை வாசியோகம் இந்த நிலைக்கு வரவேண்டுமென்றால் முதல் நிலையில் வெற்றி பெற்றால்தான் இந்த நிலைக்கு வர வேண்டும்,
அப்படி முதல் நிலையில் வெற்றி பெறாமல் நேரடியாக இரண்டாம் நிலைக்கு வந்தால் சில சிக்கல்கள் உடல் ரீதியாக வரும், அவற்றை எதிர்கொள்வதற்கு மனம் பக்குவப்படடிருக்க வேண்டும், இலையென்றால் வாசியோகத்தினால் தான் இப்படி வந்தது என்று தன் மேல் உள்ள தவறை மறைத்து வாசியோகத்தின் மேல் பழியை போட்டுவிட்டு ஒடிடுவார்கள். அதனால்
முதல் நிலை வாசியோகமான அடிப்படை வாசியோகத்தை முடித்துவிட்டு தான் இந்த மேல்நிலை வாசியோகத்திற்கு வர வேண்டும்.
சிவயோகம்:
சிவயோகத்தில் சிவகல்பம் அதாவது சிவன் என்ன கல்பம் உண்டு சிவயோகம் செய்தாரோ அதே கல்பத்தை சிவயோகத்தில் நீங்களும் உண்ண வேண்டும்.
|
சிவயோகம் |
யாருக்கு இந்தச் சிவயோகத்திற்கு வர வாய்ப்பிருக்கிறது என்றால் மேல்நிலை வாசியோகம் முடித்திருக்க வேண்டும். சிவன் உண்ட கல்பம் போக மற்ற கல்பங்கள் உண்டா என்றால் கட்டாயம் உண்டு.
இதில் ஒரேஒரு கல்பம் ஏகமூழி என்ற கல்பம் அந்தக் கல்பம்தான் சிவன் உண்டது அந்த ஏகமூழி தவிர 108 கல்பங்கள் இருக்கிறது. மற்ற கல்பங்கள் மேல்நிலை வாசியோகத்திலேயே கல்பம் உண்டு ஒவ்வொரு ஆதாரத்தலங்கிலும் வாசியோகம் செய்ய வேண்டும் இது மேல்நிலை வாசியோகம்.
சிவயோகத்தில் சிவன் உண்ட கல்பங்கள் உண்டு கடுமையான பத்தியங்கள் இருக்க வேண்டும், அப்படி கடுமையான பத்தியங்கள் இருக்கையில் மரணத்துக்கு ஒப்பான துன்பங்கள் எல்லாம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்,
அவை என்னவென்றால் நம்ம முன்னோர்கள் செய்த பாவங்கள் சாபங்களுடைய அந்தத் தொடர்ச்சி வந்து நமது உடம்பில் வந்து நிற்கும். அந்தத் தொடர்ச்சிகளெல்லாம் நமக்கு நோயாகவும் வெவ்வேறு மனக்குழப்பங்களாகவும் இருக்கும் மரபணு நோய்கள்.
இதைத்தான் "குடிலமாய் வரும்ப்பா கன்மம்" என்றார்கள் சித்தர்கள். இந்தக் குடிலமாய் வந்த கன்மத்தை போக்கும் இந்தச் சிவயோகம். இந்தக் கன்மம் எப்படி போகும் என்றால் அவரவர் முன்னோர்கள் என்னென்ன துன்பங்களெல்லாம் அனுபவித்தார்களோ அவைற்றையெல்லாம் சிவயோகத்தில் அனுபவிக்க நேரிடும் அதற்கு மனதைரியமும் வேண்டும், அதற்குண்டான உணவுக் கட்டுப்பாடு வேண்டும், அதற்கான மருந்துகளும் வேண்டும்.
|
சித்தர்கள் |
இவறையெல்லாம் சித்தர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். சித்தர்கள் நீங்கள் சிவயோகம் செய்கையில் நேரடியாக உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பார்கள். அவர்களின் வழிகாட்டல்படி தான் நீங்கள் வெற்றி கொள்ள முடியுமே தவிர அவர்களின் வழிகாட்டல் இல்லாமல் வெற்றி பெற முடியாது, அதனால் சிவயோகம் யாருக்கும் சொல்லிக்கொடுப்பதில்லை. மேல்நிலை வாசியோகம் வரை சொல்லிக்கொடுக்கிறோம் அதுவும் அடிப்படை வாசியோகம் செய்து வெற்றிபெற்றவர்களுக்குத்தான்.
இந்தச் சிவயோகத்தை தசதீட்சை என்று சொல்லுவார்கள் இதை 10 வருடம் அல்லது 12 வருடம் இந்தத் தீட்சை செய்ய வேண்டும் என்பார்கள். இந்த 12 வருடம் சிவயோகம் செய்து முடித்தால் தான் சித்தன் என்ற நிலைக்கு வர முடியும்.
அவர்கள் அடிப்படை வாசியோகம் செய்து முடித்து 32:64:16 என மூச்சுப்பயிற்சி செய்யும் (எடுத்தவுடன் இதனை முயன்று பார்க்கக் கூடாது) அந்த நிலைதான் அடிப்படை வாசியோகம் இதைச் செய்பவர்கள் யோகி என்ற நிலைக்கு வருவார்கள்.
மேல்நிலை வாசியோகம் என்ன நிலை என்றால் அடிப்படை வாசியோகத்தில் பிராணயாமத்தில் நாசியில் விரல் வைத்துத் தான் இடகலை மற்றும் பிங்கலை மாற்றுவார்கள் ஆனால் மேல்நிலை வாசியோகத்தில் நாசியில் விரலை வைக்காமலயே பிராணயாமம் செய்வார்கள் இவர்கள் வாசியோகம் சித்தியானவர்கள் இந்த நிலை மகாயோகி நிலை.
|
இளஞ்சித்தன் |
சிவயோகம் மூன்று ஆண்டுகள் செய்தவர் இளஞ்சித்தன், 5 ஆண்டுகள் சிவயோகம் செய்தவர்கள் சித்தர்களின் கூட்டத்தில் ஒருவராவார் ஆக 12 வருடம் சிவயோகம் முடிப்பவர் தான் உயர்ந்த சித்தர்.
அந்த உயர்ந்த சித்தர் நிலைக்கு அடைந்த பிறகு மௌனயோகம். மௌனயோகத்திற்கும் சிவயோகத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் அதாவது அடிப்படை வாசியோகம், மேல்நிலை வாசியோகம், சிவயோகம் இந்த மூன்று நிலைகளிலும் இறைவனை நமக்குள் காண்போம், இறைவனை நமக்குள் உணர்வோம், இறைவனுடைய தொடர்பும் நமக்குள்ளயே கிடைக்கும்.
சிவயோகத்திற்கும் மௌனயோகத்திற்கும் என்ன வித்தியாசமென்றால் சிவயோகத்தில் உடல் கல்ப உடலாக மாறி நிலைத்துவிடும் அதாவது காயசித்தி. மௌனயோகத்தில் உடலை அணுக்கலாகப் பிரித்துவிடுகிறோம் இது அருபநிலை, இந்த மௌனயோகிதான் ஞானி.
ஆகச் சித்தன் வரை சிவயோகம், ஞானி என்ற நிலை அடைவதற்கு அருபநிலைக்கு செல்ல வேண்டும். அப்படி அருபநிலை அடைந்தவர்கள் தான்
18 சித்தர்கள் இதில் 18 மட்டுமல்ல (சித்தர்கள் என்பவர் யார் என்ற முந்தைய பதிவைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்) இந்த அருபநிலை அடைந்தவர்கள் தான் இன்றும் இருக்கிறார்கள் நாம் அவர்களிடம் தொடர்பு கொள்கிறோம் அவர்கள் நமக்கு வழிகாட்டுகிறார்கள்.
ஆக இந்த மௌனனயோகம் எப்படி என்றால் சிவயோகம் செய்து வெற்றி பெற்றப்பிறகு இந்த உடலைப் பிரிப்பதற்கு வலஞ்சுற்றல் நாம் செய்தோம் என்றால் இந்தகாயத்தை இருக்கச்செய்யும் அதாவது இந்தக் காயம் நிலைப்பதற்காகச் செய்வது,
இடஞ்சுற்றல் செய்தால் இந்தப்பிரபஞ்சந்தோடு தொடர்பு கொள்ளுதல் அதாவது முதலில் நம்முள் இருக்கும் இறைவனை தொடர்பு கொண்டோம், இப்போது இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் இறைவனை தொடர்புகொள்கிறோம், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள இறைவனை தொடர்புகொண்டு இந்தப்பிரபஞ்சத்தில் உள்ள இறைவனோடு இறைவனாக மாறும்போது தான் இந்த உடல் அணுவாகப் பிரிந்து அருபநிலையாகும்.
பொதுவாக இந்த அணுவை நாம் பார்க்கமுடிவதில்லை ஆனால் இருக்கிறது தானே, அதுபோல நமது உடல் மாறிவிடும் அந்த நிலை அடைவது தான் அருபநிலை இந்த அருபநிலை அடைந்த சித்தர்களுடன் தொடர்பு கொள்கிறோம்.
|
அருபநிலை |
அந்த அருபநிலை அடைந்திட்டால் முழுமையாக அழிவேகிடையாது. காயசித்தி செய்தவர்கள் மீண்டும் மீண்டும் உடலைக் காயசித்தி செய்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் இந்த அருபநிலை அடைவது தான் முடிவு அவர்கள் இறைவனோடு இறைவனாக இறைத்தன்மை எய்தி இறைவனாக மாறிவிடுகிறார்கள் அப்படி மாறிய நிலைதான் அருபநிலை, அப்படி இப்பொழுது நமக்குத்தெரிந்து அருபநிலை அடைந்தவர் தான் வள்ளலார்.
நமக்குத் தெரியாதவர் அருபநிலை அடைந்தவர்கள் என்றால் அகத்தியர், திருவள்ளுவர், சட்டைமுனி இவர்களெல்லாம் அருபநிலைக்கு போனவர்கள் தான் ஆனால் இந்தச் செய்தி சித்தர் பாடல்களில் தான் நாம் அறிந்து கொள்ள முடிகிறது அதுபோக அவர்களைத் தொடர்பு கொண்டு பேசையில் தான் அந்த அருமை தெரிகிறது. இப்படி தொடர்புகொண்டு பேசலாம் என்றால் அனைவருமே பேசலாம்.
இப்பொழுது இந்த வாசியோகத்தில் நிலை உங்களுக்குத் தெளிவாகப் புரிந்திருக்கும் என நம்புகிறோம். மற்றபடி தனித்தனியாக வாசியோகம் என்றெல்லாம் கிடையாது வாசியோகம் என்பது சிவயோகம் தான் அதுதான் வாசி திருப்பிப் படித்தால் சிவா இந்த வாசியோகமும் சிவாவும் ஒன்றுதான் ஆக நீங்கள் சிவனாவது தான் "தான் அவன் ஆதல்" இந்தத் தான் அவன் ஆதல் என்பது தான் வாசியோகத்தின் குறிக்கோள் இதுதான் பிறந்த மனிதனுடைய குறிக்கோள், இதன் மூலம் நாம் வாசியோகத்தினுடைய நிலைகள் தெரிந்து கொண்டோம்.
தான் அவன் ஆகுக!
தான் அவன் ஆகுக!!
தான் அவன் ஆகுக!!!
சித்தர் இராஜா கிருஷ்ணமூர்த்தி
ஐயா அவர்களின் குரல் பதிவு கீழே உள்ளது