ஞாயிறு, 2 ஜனவரி, 2022

வாசியோகம் ஆன்லைனில் சொல்லித்தர முடியுமா? VasiYoga Online

வாசியோகம் ஆன்லைனில் சொல்லித்தர முடியுமா?

வாசியோகம் ஆன்லைனில் சொல்லித்தர முடியுமா?
வாசியோகம் ஆன்லைனில் சொல்லித்தர முடியுமா?

VasiYoga Online


அன்பு உயிர்களே!

வாசியோகம் ஆன்லைனில் சொல்லித்தர முடியுமா? இந்தக் கேள்வியைப் பல நேரங்களில் என்னிடம் கேட்கப்பட்டது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் நாம் ஏறக்குறைய வாசியோகம் என்றால் அட்டங்க யோகம் என ஏறக்குறைய அறிந்துள்ளோம். இந்த அஷ்டாங்க யோகம் எப்படி செய்ய வேண்டும் என்று அடுத்து வரும் பதிவுகளில் காணலாம்.


வாசியோகம் ஆன்லைனில் சொல்லித்தர முடியுமா?


வாசியோகம் என்பது சித்தர்களுடைய தனிப்பட்ட ஒரு சிறப்பான ஒரு பகுதி.


இந்த யோகத்தைப் பற்றிப் பேசும்போதோ

அல்லது சித்தர்களினுடைய காரியங்களைப் பற்றிப் பேசும்போதோ  குறிப்பாக இந்த வாசியோகம் பற்றிப் பேசும்போது சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால்

"குரு இல்லா பேர்களுக்கு இன் நூலே குரு" எனக்கூறுகிறார்கள்

இதனுடைய கருத்து என்னவென்று அவர்களே விளக்குகிறார்கள் "அறிவுடைய பிள்ளை இதை அறிவான்"

அப்படியானால் அறிவுள்ளவர்களுக்கு ஒரு நூல் இருந்ததென்றால் அந்த நூலை அவர்களுக்கு வழிகாட்டி, குரு எல்லாமே அப்படியென்று சித்தர்கள் வந்து அவர்களுடைய நூலைப் பற்றிக் கூறுகையில்  இதைச் சொல்கிறார்கள்.


அடுத்து என்ன சொல்கிறார்கள் என்றால்  அபரிமிதமான அறிவு இருக்கிறவர்களுக்கு தான் வாசியோகமா கொஞ்சம் தெரிஞ்சுக்கணும் கொஞ்சம் அல்லது நேரம் இல்லாதவர்களுக்குச் சித்தர்களைபற்றிய பதிவுகள் வலைத்தளத்தில் எல்லாம் கலந்த ஏகப்பட்ட பதிவுகள் உள்ளது.

வாசியோகம்
வாசியோகம்

குரு இல்லாதவர்களுக்கு, நமது வலைத்தளத்தில் வீட்டில் வாசியோகம் 28 பாடங்கள் பதிவிடப்பட உள்ளது. அதன் பிறகு வாசியோக, சித்தர்கள், கடவுள்  மற்றும் இப்பிரபஞ்சத்தின் இரகசியங்கள் பற்றிய சித்தர்களின் விளக்கங்கள் வரவிருக்கிறது. இதைப் படித்து அதனை ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்து படித்துப்பாருங்கள்.


சித்தர்கள் எதை முன்வைக்கிறார்கள்  என்றால் கற்றல் என்றால் ஒரு நூலே குரு எனச் சொல்லி உள்ளார்கள் அறிவுடையோர்களுக்கு. நேரம் இல்லாதவர்களுக்கு

 "கற்றலில் கேட்டல் நன்று"

அதாவது நூல்களைப் படித்துக் கிட்டதட்ட 100 பக்கம் அல்லது 200 பக்கம் நூல் படிக்க நேரம் அதிகமாகும் அதற்குச் சித்தர்கள் சொன்ன எளிய வழி இது தான் 

  "கற்றலில் கேட்டல் நன்று"

வளைத்தளத்தில் அன்பர்கள் படித்துவிட்டு அவர்களின் சந்தேகங்கள் என்னிடம் கேட்பார்கள் அவர்களுக்குத் தனித்தனியாகப் பதில் கொடுத்தேன் அதனால் எனக்கு நேரம் இல்லாமல் போனது அதுவே இந்த வலைத்தளத்தில் பதிவிட்டால் எல்லோருக்கும் கேட்பார்கள் மற்றும் பார்ப்பார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சரி இதற்கு ஏதாவது முன் உதாரணம் இருக்கிறதா என்று ஆராய்ந்தபிறகு 2 முன்னுதாரணம் இருக்கிறது. 

முதல்  முன்னுதாரணம் மகாபாரதத்தில் ஏகலைவன் என்பவர் துரோணரிடம் ஏதும் பேசாமல் அவருக்குத்தெரியாமல் மறைந்திருந்து அர்சுனனுக்கு வில்வித்தை கற்றுகொடுக்கும்போது சற்று தொலைவிலிருந்தே அர்சுனனைவிட திறமையான வில்வித்தனாகக் வில்வித்தை கற்றுக்கொண்டான். 

துரோணரே ஏகலைவன் தன்னிடம் பேசாமலேயே இவ்வளவு தூரம் அர்சுனனைவிட திறமைசாளியாக இருந்ததை கண்டு அதிர்ச்சியானார் ஏனென்றால் இந்த ஏகலைவன் ஒருகுடிமகன் துரியோதனன் அரசன் அந்த அரசன் ஏகலைவனின் திறமையைக் கண்டு தன்னுடன் சேர்த்துக்கொண்டால் பஞ்சபாண்டவர்களின் கதை என்ன ஆகும் எனப் பயந்துவிட்டார் அதன் பிறகு தான் ஏகலைவனின் கட்டவிரலை கேட்டார் ஏகலைவனும் தனது கட்டைவிரலை துண்டாக வெட்டிக்கொடுத்தார். 

இன்னொரு பெரிய விசயம் என்னவென்றால் இந்த யோகாவை நேரடியாகப் பார்த்துத் தானே சொல்லித்தர வேண்டும் அப்படியென்று. இதைக் கற்றுக்கொடுப்பதில் பல உண்டு சிலர் இதோ குண்டலினி என்று தடவி இதோ மேலே ஏறிவிட்டது பார் அப்படியெனக் கூறுகிறார்கள், மற்றும் சிலர் ஏதேதோ சொல்கிறார்கள் நாம் அவர்களைக் குறைசொல்வதற்கு வரவில்லை அவரவர்கள் தெரிந்ததை அவரவர்கள் செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் நேரடியாகப் பார்த்துக் கற்றுத்தர விருப்பப்படலாம்.

 இங்கு யாரையும் தடவிப்பார்த்து இதோ குண்டலினி ஏறுகிறது எனச் சொல்லப்போவதில்லை, குண்டலினியை நீங்கள் தான் ஏற்ற வேண்டும் அது எப்படி ஏறும் என நீங்கள் தான் உணரவேண்டும அவற்றைத்தான் இங்குச் சொல்லித்தரப்போகிறோம்.

அடுத்த முன்னுதாரணம் என்னவென்றால் ஆதிசேஷன் பதஞ்சலியாக வந்து வாசியோகத்தை கற்றுக்கொடுத்தார்.  இது ஒரு பெரிய கதை இவற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

அதாவது ஆதிசேஷன் வாசியோகத்தை கற்ற வேண்டும் என விரும்பி இந்த யோகத்தை கற்றுக்கொண்டார் அது போக இந்த வாசியோகத்தை மற்றவர்களுக்கெல்லாம் கற்றுக்கொடுக்கவேண்டுமென நினைத்தார்.

 மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் எனக் கூறும்போது நிறைய மாணவர்கள் அதாவது ரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கற்றுக்கொள்ள வந்தார்கள். 

ஆனால் ஆதிசேஷன் பதஞ்சலியாக இருக்கையில் அவருடைய விசக்காற்று பட்டாலே கற்கவந்தவர்கள் அழிந்துவிடுவார் என்ற நிலைமை இருந்தது அப்போது மாணவர்கள் அழியாமல் இருக்க என்ன செய்வது என விஷ்ணுவிடம் கேட்கும்போது விஷ்ணு சொன்னது என்னவென்றால் ஒரு திறையை போடனுக்கொள் உன்னை இந்த உலகத்தில் உள்ளவர்கள் யாரும் பார்க்கக் கூடாது எனக் கூறினார், ஏனெனில் ஆதிசேஷன் விஷ்ணு மட்டுமே நேரடியாகப் பார்க்க முடியும் மற்றவர்கள் யாரும் அவரைப் பார்க்க முடியாது.

அப்படி யாரவது பார்த்தால் அவர்கள் அழிந்துபோய்விடுவார்கள் இது தான் அந்த நிலைமை. பிறகு பதஞ்சலி முனிவர் திறையை போட்டுக்கொண்டு தனது குரலினால் வாசியோகத்தை அவரிடம் பயிலவந்த மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். 

பதஞ்சலிமுனிவர்
பதஞ்சலிமுனிவர்


ஆகப் பதஞ்சலிமுனிவரை நேரில் பார்க்காமல் அவருடைய குரலைகேட்டுத்தான் இந்த யோகம் இந்த உலகம் முழுவதும் பரவியுள்ளது.

 இந்த வாசியோகம் என்பது குருவை நேரில் பார்ப்பது என்று அல்ல அவரின் குரலைக் கேட்டாலே போதும் இதுதான் இந்த வாசியோகத்தின் ஆரம்பமே பதஞ்சலிமுனிவரின் மூலமாக வந்தது. 

இன்னொன்று என்னவென்றால் நேரடியாகக் கற்றக வேண்டுமென்ற முறை வந்தது எப்படி என்றால் அந்தக் காலத்தில் இது போன்ற தொலில்நுட்பவசதிகள் கிடையாது, அதனால் அவர்கள் நேரடியாக வந்துதான் ஆகவேண்டியிருந்தது.

 இப்பொழுது அப்படியில்லை இப்பொழுதுள்ள விஞ்ஞான வளர்ச்சியில் ஏதோ ஒரு மூலையிலிருந்து பேசுவதை மற்றொருவர் தொழில்நுட்ப உதவியால் தொடர்பிலிருந்து கேட்க முடிகிறது. 

ஆகா இந்த வாசியோகம் பதஞ்சலி முனிவர்மூலம் வாய்மொழி வழியாகக் கற்றுகொடுக்கப்பட்டது நேரடியாக என்றாலும் வாய்மொழி மூலமாகத்தான் அந்தக் காலத்தில் கற்றுக்கொடுக்கப்பட்டது.

ஆக இந்த வாசியோகம் என்பது வாய்மொழியாக அல்லது எழுத்து மூலமாகக் கற்றுக்கொடுப்பது சித்தர்களுக்கும், பதஞ்சலி முனிவருக்கும் உடன்பட்ட கருத்து அவர்களின் கருத்துக்கள் சரியானதாகத்தான் இருக்கும்.



தான் அவன் ஆகுக!
தான் அவன் ஆகுக!!
தான் அவன் ஆகுக!!!

சித்தர் இராஜா கிருஷ்ணமூர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மருந்தீடு + முறிவு பாகம்-1

மருந்தீடு புலிப்பாணி சித்தர் மந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்பது மனதின் திரம் மந்திரம்  தந்திரம் என்பது தனது திறன் தந்திரம். இந்த மனதின் ...