சித்தர்களின் பாடல்களுக்கு பொருள் கூறுவது எப்படி?

சித்தர்களின் பாடல்களுக்கு பொருள் கூறுவது எப்படி?


Siddhar
Siddhar


சித்தர் பாடல்களில்  வெறும் இரண்டு வரியை வைத்துக்கொண்டு, ஒரு வரியை வைத்து, ஒரு வார்த்தையை வைந்து, ஒரு பாடலை வைத்து பொருள் சொல்லுவது என்பது தவறு, 

        அப்படி சொல்பவரும் கேட்பவரும் புத்திகூறில்லாதவர் என சித்தர்கள் சாடுகிறார்கள். சித்தர் நூல்கள் எந்த நூலாக இருந்தாலும் சரி   சித்தர் பாடல்களில் முதல் வரியிலிருந்து கடைசி வார்த்தை வரை படிக்க வேண்டும்.

         ஏனெனில் பல இடங்களில் பல பொருள்களை சொல்லி இருப்பார்கள், பஞ்ச வித்து என்பதோ, பஞ்ச பூதம் என்பதோ, அகாரம் உகாரம் மகாரம் நாத விந்து என்பதோ இதைத்தான் சித்தர்கள்  மாத்தி மாத்தி மாத்தி சொல்லுவார்கள் அது அவரவர்களின் அனுபவத்துக்கேற்றார்போல் சொல்லுவார்கள்.

பஞ்ச பூதம்
பஞ்ச பூதம்

         இதில் அஞ்செழுத்து என்பது என்ன சிவாயநம நமசிவாய என்பதும் ஒன்று தான் இதைத்தான் பஞ்சிகரணம் என்பார்கள் சூக்கும பஞ்சாக்கரம், அதி சூக்கும பஞ்சாக்கரம் என்றெஎல்லாம் மாற்றி மாற்றி  இதைத்தான் சொல்லுவார்கள், இவற்றை விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் முருகனின் வாசியோகத்தை சிரத்தையுடன் செய்தல் வேண்டும்.

         அதைவிட இந்த உலகத்தில் வேறொன்றும் இல்லை.  அவையனைத்தும்  40 வருடங்களாக  சித்தர்களின் அருளால் நான்(சித்தர் இராஜா கிருஷ்ணமூர்த்தி) கடைந்து எடுத்தது இது, இதை சித்தர்கள் சொல்ல சொன்னார்கள் அதனால் சொல்கிறேன் அவ்வளவுதான். 

       அதனால் இங்க ரெண்டு பாடல் அங்கே ஒரு பாடல் என படிக்கமல் ஆழமாக படியுங்கள் அதோடு முருகனின் சாகாக்கல்வி வாசியோகம் செய்யுங்கள் அனைத்தும் நன்றாக விளங்கும். 

        மற்றபடி நன்றாக படிங்க நன்றாக தெரிஞ்சுக்கங்க தவறு கிடையாது, எல்லாமே  இந்த வாசியில்  மற்றும் வேதையில் அடக்கம்,  இந்த இரண்டைத் தவிர வேற எதுவுமே இல்லை சித்தர்கள் அனைத்தையுமே இந்த இரண்டிற்குள்ளே அடக்கியுள்ளார்கள். 

         நீங்கள் எந்தப்பாடலை எடுத்தாலும் இதைத்தான் மாற்றி மாற்றி கூறியிருப்பார்கள், நீங்கள் அதை முழுமையாக படியுங்கள் உள்வாங்கி படியுங்கள் அதோடு வாசியும் செய்தால் எந்த பாடல் எந்த நூலில் இருந்தாலும் உங்களுக்கு அதன் பொருள் விளங்கும்.

        பொருள் அறியாமல் சொல்வது தவறு ஆகும். சிவாயநம கீழிருந்து மேலும் அல்லது மேலிருந்து கீழும் சித்தர்கள் கூறுவார்கள் அதுமட்டுமில்லாமல் அடிப்படை வாசியோகம், மேல்நிலை வாசியோகம் மற்றும் சிவயோகம் இவற்றையும் மாற்றி மாற்றி சித்தர்கள் தங்களது நூல்களில் கூறுவார்கள்.

-சித்தர் இராஜா கிருஷ்ணமூர்த்தி



தான் அவன் ஆகுக!
தான் அவன் ஆகுக!!
தான் அவன் ஆகுக!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மருந்தீடு + முறிவு பாகம்-1

மருந்தீடு புலிப்பாணி சித்தர் மந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்பது மனதின் திரம் மந்திரம்  தந்திரம் என்பது தனது திறன் தந்திரம். இந்த மனதின் ...