ஞாயிறு, 14 ஜூலை, 2024

மருந்தீடு + முறிவு பாகம்-1

மருந்தீடு

புலிப்பாணி சித்தர்

மந்திரம் என்றால் என்ன?

மந்திரம் என்பது மனதின் திரம் மந்திரம்

 தந்திரம் என்பது தனது திறன் தந்திரம்.

இந்த மனதின் திறம் மந்திரம் என்பதை முழுக்க பொய் என்று நாம் அதை உதாசீனம் பண்ண முடியாது, உதாரணமாக ஓம் என்ற மந்திரம் உச்சரியுங்கள், அ உ ம், சரவணபவ, ஓம் நமசிவய, நமோநாராயணாய, ஓம் ஐயும் கிழியும் சவ்வும் இது போன்ற அடிப்படை மந்திரங்களை நாம்  உச்சரிப்பதனால் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் மிகுந்த நன்மை தரக்கூடியவை. 

சித்தர்கள் மந்திரங்களை பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என மேலோட்டமாக பார்த்தால் இந்த மந்திரங்கள் எல்லாம் பொய் என்று கூறுவது போலவே இருக்கும்,

மந்திரம் எல்லாம் பொய் என்று இருப்பதற்கு என்ன காரணம் எனப் பார்த்தால்  இந்த மந்திரங்கள் எந்தெந்த காரியங்களுக்காகச் சொல்லப்பட்டதோ அந்த காரியங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும்,

புலிப்பாணி சித்தர்
புலிப்பாணி சித்தர்


இந்த மந்திரங்கள் எல்லாம் நம் எல்லாருக்கும்  நன்மை பெறுவதற்காகச் சொல்லப்பட்டது. மந்திரங்கள் கூறுவதால் மன அமைதியாகுவதற்கும் நம்மில் ஆன்மீக சக்தி பெறுவதற்கும், குறிப்பாக வாசி யோகத்தில் ஆறு தளங்களையும் அறிந்து கொள்வதற்காகச் சொல்லப்பட்டது இந்த மந்திரங்கள்.

இதை ஏன் பொய் என கூறுகிறார்கள் என்றால், இதை வைத்து நான் வசியம் செய்திடுவேன், மரணம் செய்திடுவேன், மோகனம் செய்திடுவேன் ஆணையும் பெண்ணையும் மயக்கிவிடுவேன் என்பது எல்லாம் சொல்வது பொய் என்று சொல்கிறார்கள் சித்தர்கள்.

இந்த மந்திரங்கள் எல்லாமே நமக்கு வந்து ஆக்கப்பூர்வமான சக்தியைத் தரக்கூடியது அப்படியானால் இந்த மந்திரங்கள் நல்ல ஆக்கப்பூர்வமான சக்தியை தருகிறது என்றால் இந்த மந்திரம் ஆக்கப்பூர்வமான தீய சக்தி தராதா? அப்படியென்ற ஒரு கேள்வி உங்களுக்கு எழலாம் அந்தக் கேள்விக்கான பதில்களைச் சித்தர்களே சொல்கிறார்கள் "மந்திரம் கால் மதி முக்கால் மந்திரத்தில் மாங்காய் காய்க்காது." இது சித்தர்கள் சொன்ன பதில், இந்த மந்திரத்தால் எதுவும் பண்ண முடியாது, 

புலிப்பாணி சித்தர்
Biological

ஆனால் சித்தர்கள் அஷ்டகர்மம் அப்படியென்ற ஒரு பகுதியைச் சொல்கிறார்கள். அஷ்டகர்ம சித்தி என்ற ஒன்று உள்ளது இந்த அஷ்டகர்மம் பற்றி  அதர்வண வேதத்திலும் கூறியிருக்கிறார்கள், சித்தர்களும் கூறியிருக்கிறார்கள் 

அதர்வண வேதத்தில் அஷ்டகர்மம் பற்றிச் சொல்லியிருப்பது மந்திரங்களும் தந்திரங்களும், ஆனால் சித்தர்கள் இதையும் பொய் என்கிறார்கள் ஆனால் இதிலும் சில மருந்துகள் இருக்கிறது.

சித்தர்கள் சொல்லும் அஷ்டகர்மம் என்பது இடுமருந்து இந்த இடுமருந்து பல விஷ ஜந்துக்களிலிருந்தும் மனிதனுடைய இறந்த பிணத்திலிருந்தும் அதில் சில பகுதிகளை எடுத்து அல்லது அதைச் சிதைத்து அதிலிருந்து சில தவறான வடிதல்களை எடுத்துச் செய்வார்கள் இதுவும் அறிவியல் தான்.

Biological

இது என்ன அறிவியல் என்றால் இன்று நாம் அதை உயிரியல் ஆயுதம் எனச் சொல்லுகிறோம். இவை எல்லாம் விஷங்கள் இதெல்லாம் வைரஸ், வைரஸ்களை அழிக்க முடியாது, அது போல வைரஸ்களை போக்குவது கடினம் ஆக இதெல்லாம் வைரஸ் பாக்டீரியா.

இது மாதிரி விஷயங்கள், விஷ காளான் மிக நுண்ணிய விஷ காளான்கள் இவற்றை எல்லாம் தனியாக எடுத்து அதை அவர்கள்  மருந்தாகச் செய்தார்கள். அதைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். ஆகா சித்தர்கள் இதை மந்திரத்தில் செய்யவில்லை தந்திரத்தில் தான் செய்கிறார்கள். இந்த இடு மருந்துகளை அழிக்கக்கூடிய தந்திரங்கள் அனைத்தையும் சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்..

Biological
Biological

பயலாஜிக்கல் வெபன்ஸ் மருந்துகளை யாரும் பயன்படுத்தினாலும் அது தீமையில் தான் போய் முடியும் அதனால் இதைத் தொடாமல் இருப்பது நல்லது, இதை எவன் செய்கிறானோ அவனும் அதிலேயே அழிந்து போவான் கருத்தொழிலும் கன்மத்தொழிலும் எவன் செய்கிறானோ அவனும் அதிலே அழிந்து போவான் எனச் சித்தர்கள் சொல்கிறார்கள்.


இந்த கருத்தொழில் தவறாகச் செய்ததனால் தான் பெரும் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் அழிந்து போனார் என்கிறார் அகத்தியர். இது சாதாரண வேலை இல்லை, இந்த வேலையும் முறிப்பதற்கு ரோமரிஷி மருந்து சொல்லியுள்ளார்.

தொடரும்....



மருந்தீடு + முறிவு பாகம்-1

மருந்தீடு புலிப்பாணி சித்தர் மந்திரம் என்றால் என்ன? மந்திரம் என்பது மனதின் திரம் மந்திரம்  தந்திரம் என்பது தனது திறன் தந்திரம். இந்த மனதின் ...